கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர்கள் மன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற “விவேகாவின் இன்னிசை மழை” நிகழ்வில் தரிசனம் விழிப்புணர்வற்றோர் பாடசாலையில் கல்வி பயிலும் நடசேன் சுதர்சினியின் கனிர் குரல் அனைவரையும் வெகுவாக ஈர்த்தது.
எமது மாவட்டத்தில் இளம் கலைஞர்கள் எங்கெல்லாம் மறைந்துள்ளார்கள் என்பதை சுதர்சினியின் குரல் வெளிப்படுத்தியுள்ளது.
எமது மாவட்டத்தில் ஒன்றிணைந்த கலைஞர்கள் செயற்பாடுகள் இன்மை காரணமாகவே எம்மத்தியில் உள்ள அற்புத கலைஞர்களை நாங்கள் இனங்காண முடியாத நிலையேற்படுகின்றது.
எதிர்வரும் காலத்திலாவது எமது சமூகத்தில் ஆரோக்கியமான இவ்வாறான விடயங்களை கையாளும் வகையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும்.அதற்கான கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படவேண்டும்
0 Comments