Home » » நீங்கள் தொடர்ந்தும் ஜனாதிபதியாக இருப்பதனையே நாம் விரும்புகிறோம், முஸ்லிம் அரசியல் தலைவர்கள்

நீங்கள் தொடர்ந்தும் ஜனாதிபதியாக இருப்பதனையே நாம் விரும்புகிறோம், முஸ்லிம் அரசியல் தலைவர்கள்

நீங்கள் தொடர்ந்தும் ஜனாதிபதியாக இருப்பதனையே நாம் விரும்புகிறோம், அதனால் இருதரப்பும் நம்பிக்கை வைத்து நட்புடன் சுமுகமாக செயற்படுவதை உறுதிசெய்வோம்” என நேற்று  ஜனாதிபதியுடனான  சந்திப்பில் கலந்து கொண்ட முஸ்லிம் அரசியல் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.இச்சந்திப்புஒருவிதமான நம்பிக்கையையும். புரிந்துணர்வையும் ஏற்படுத்திய மகிழ்ச்சியை சகலருக்கும் தந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஏ. எச். எம். அஸ்வர் தெரிவித்துள்ளார். இதேவேளை நாட்டில் இனமுறுகலை ஏற்படுத்தும் வகையில் பேசுவோரைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த உடன் நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ்மா அதிபருக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.
நேற்றுப் பகல் பதுளையில் முஸ்லிம் அரசியல் தலைவர்களைச் சந்தித் துரையாடிய ஜனாதிபதி, அத்தலைவர்கள் முன்பாகவே இந்தப் பணிப்புரையை விடுத்துள்ளார்.
இதேவேளை பேருவளை, அளுத்கம பகுதிகளில் இடம்பெற்ற சம்பவங்களுக்கு ஜனாதிபதி தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்ததுடன், அச்சம்பவத்தில் சொத் துக்களை இழந்த வர்க ளுக்கு விரை வாக நஷ்ட ஈட்டி னை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் கேட்டுக்கொண்டார்.
முஸ்லிம் மக்களுடன் தான் மிகவும் ஆழ்ந்த நட்பும், பாசமும் வைத்துள்ளதாகவும், அவர்களுக்கு இன்னல் ஏற்பட தான் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை எனவும் ஜனாதிபதி அங்கு தெரிவித்தார். பேருவளை, அளுத்கம சம்பவத்திற்கு அரசாங்கமும் பின்னணியில் உள்ளதாகச் சில முஸ்லிம் அரசியல்வாதிகள் நினைத்துக்கொண்டு அரசை அவதூறாகப் பேசி வருகின்றனர். அது முற்றிலும் தவறானது. முஸ்லிம் மக்களை மட்டுமல்ல நாட்டு மக்கள் சகலரையும் எனது அரசாங்கம் சமமாகவே நடத்தி வருவதுடன். அவர்களது பாதுகாப்பிற்கும் காப்பரணாக இருந்து வருகிறது என்றும் ஜனாதிபதி கூறினார்.
மக்களின் வாக்குகளைப் பெற்று தேர்தலில் வெற்றி பெறுவதற்காக எனது அரசாங்கம் என்றுமே குறுகிய நோக்குடன் செயற்பட்டது கிடையாது. எனக்கு நாட்டின் ஒற்றுமையே முக்கியம். தேசிய ஒற்றுமைக்காகவே நான் பாடுபட்டு வருகின்றேன் என்றும் ஜனாதிபதி கூறினார்.
இக்கலந்துரையாடலில் கலந்து கொண்ட முஸ்லிம் அரசியல்வாதிகள் “நீங்கள் தொடர்ந்தும் ஜனாதிபதியாக இருப்பதனையே நாம் விரும்புகிறோம், அதனால் இருதரப்பும் நம்பிக்கை வைத்து நட்புடன் சுமுகமாக செயற்படுவதை உறுதிசெய்வோம்” எனத் தெரிவித்தனர்.அத்துடன் ஜனாதிபதியுடனான இந்தச் சந்திப்பு முஸ்லிம் அரசியல் தலைவர்களிடையே ஒருவிதமான நம்பிக்கையையும். புரிந்துணர்வையும் ஏற்படுத்திய மகிழ்ச்சியை சகலருக்கும் தந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஏ. எச். எம். அஸ்வர் தெரிவித்துள்ளார்.
நேற்றுக் காலை பாணந்துறை நோலிமிட் வர்த்தக நிலையம் எரியுண்டமை தொடர்பாக உண்மையானதும். சரியானதுமான அறிக்கையைத் தன்னிடம் சமர்ப்பிக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு ஜனாதிபதி உத்தரவிட்டார்.
புலனாய்வு பிரிவின் குறைபாடு சில வன்முறைச் சம்பவங்கள் இடம்பெறக் காரணமாக அமைந்துள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி. பயங்கரவாதத்தை முறியடித்த எமக்கு சிறுசிறு சம்பவங்களை இல்லாதொழிப்பது ஒரு பெரிய விடயமல்ல எனவும் கூறினார்.
பதுளையில் இடம்பெற்ற இவ்விசேட சந்திப்பில் அமைச்சர்கள் பசில் ராஜபக்ஷ, நிமல் சிறிபால டி சில்வா, டளஸ் அழகபெரும. அனுர பிரியதர்ஷய யாப்பா. டிலான் பெரேராவுடன் அமைச்சர்களான ஏ. எச். எம். பெளஸி, ரவூப் ஹக்கீம், ஏ. எல். எம். அதாவுல்லா, ரிசாத் பதியுதீன், பசீர் சேகுதாவூத், பிரதிய மைச்சர்களான பைஸர் முஸ்தபா, எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ், பாராளுமன்ற உறுப்பினர் ஏ. எச். எம். அஸ்வர் ஆகி யோரும் கலந்துகொண்டனர்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |