Home » » தமிழர்களின் உயிர்துடிப்பும், ஆன்ம துடிப்பும் கிழக்கின் படுவான்கரையில்தான் உள்ளது.

தமிழர்களின் உயிர்துடிப்பும், ஆன்ம துடிப்பும் கிழக்கின் படுவான்கரையில்தான் உள்ளது.

"படுவான்கரையிலேதான் தமிழர்களின் உயிர்துடிப்பும், ஆன்ம துடிப்பும் உள்ளது அந்நியமோகம், நவீனம், தொழிநுட்ப வளர்ச்சி என்பன நம்மைப் பீடித்திருக்கின்ற காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இது எம்மை ஒரு நோய்கள் போல் பீடித்திருக்கின்றது. இதனால் நன்மையும் உண்டு, தீமையும் உண்டு. தீமைதான் அதிகமாக உள்ளது. இந்த நோய்க்குள் அகப்படாமல் தப்பி நிற்கின்றன இந்த கிராமங்கள். இங்கே உள்ள கிராமிய கலைகள் கூத்துக்கள், கொம்புமுறி ஆகியவை வரவேற்கபடவேண்டியதொன்று.  இவ்வாறான தமிழர்களின் கலை கலாசாரங்களை அழியாமல் பாதுகாக்க வேண்டிய எமது பொறுப்பாகும்.இவ்வாறு தெரிவித்தார் பேராசிரியர் சி.மௌனகுரு
அண்மையிலே முனைக்காட்டிலே நடைபெற்ற கொம்புமுறி விளையாட்டின் போது கலந்துசிறப்பித்த  அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்
கிழக்கு மாகாண தமிழ் மக்களுக்கென்று சில அடையாளங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று அவர்களுடைய பாரம்பரிய வழிபாட்டு முறைகள், அவற்றுக்குரிய பக்தி கதைகள், கிராமிய பாடல்கள், எமது கூத்துக்கள் என்பனவாகும். இவையெல்லாம் எமது கிழக்கு மாகாண  தமிழ் மக்களின் தனித்துவத்தினைக் காட்டும் பண்பாட்டு  அடையாளங்கள் ஆகும். நாம் இன்று பல்வேறு சூழல்களுக்குள் அகப்பட்டு நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ள நிலையில் எம்மை தக்கவைத்துக் கொள்ளக்கூடியது இந்த பாரம்பரிய கலைகள் தான். அவற்றுள் ஒன்றுதான் இந்த கொம்புமுறி. இது கண்ணகியம்மனுடன் தொடர்புடையது. இலங்கையிலே கண்ணகியம்மனை நான்கு முறையிலே வணங்கப்படுகின்றது. பத்தினி தெய்வமாக வும், கண்ணகியம்மனாக, அம்மாளாக, இராஜேஸ்வரியாகவும் வெவ்வேறு வழிபாட்டு முறைகளில் வணங்கப்படுகின்றது. மட்டக்களப்பிலே சடங்குகளெல்லாம் கும்பாபிஷேகங்களாக மாறிக்கொண்டிருக்கின்றது.
. மெல்ல மெல்ல எமது பண்பாடுகளை இழந்து கொண்டிருக்கின்றோம்.
இந்த கண்ணகியம்மன் வழிபாடு இருக்கும் வரைக்கும் கொம்புமுறிக்கு அழிவே கிடையாது. இதனால்தான் மீண்டும் இது தழைத்தோங்கியுள்து. இக்கலையினை எதிர்கால் சந்ததியினருக்கும் இட்டுச்செல்ல வேண்டும் அப்போதுதான் எமது பாரம்பரிய கலைகள் அழியாமல் பாதுகாக்கப்படும்”
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |