Advertisement

Responsive Advertisement

அவுஸ்ரேலியாவில் உள்ள இலங்கை அகதிகளுக்கு மனவள ஆலோசனை! - தற்கொலைகளை தடுக்க முயற்சி

அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கை அகதிகளுக்கு மனவள ஆலோசனை வழங்கும் வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகிறது. அவுஸ்திரேலியாவின் குடிவரவுத் துறை அமைச்சர் ஸ்கொட் மொரிசன் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கை அகதிகள் மத்தியில் தற்கொலை செய்துக் கொள்ளும் எண்ணம் அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு வார காலப்பகுதியில் இரண்டு பேர் தற்கொலைக்கு முயற்சித்துள்ளனர். மிகவும் அழுத்தமான மனநிலையினாலேயே இவ்வாறான தற்கொலை முயற்சிகள் இடம்பெறுகின்றன. இந்த நிலையில் அவர்களுக்கு மனவள ஆலோசனைகளை வழங்கும் நடவடிக்கைகள் நடத்தப்படவுள்ளதாக அமைச்சர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அவுஸ்திரேலியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் உள்ள ஒப்பந்தம் இருக்கும் வரைக்கும் இலங்கை புகலிட கோரிக்கையாளர்களின் பிரச்சினைக்கு தீர்வு காணமுடியாது என ஆஸியில் உள்ள அகதிகளுக்கான சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இலங்கை அகதிகளை மட்டும் திட்டமிட்டு நாடுகடத்துவது உண்மையில் அவுஸ்ரேலிய மக்கள் மத்தியில் மிகவும் வேதனையளிக்க கூடிய விடயம் எனவும் மேலும் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments