Advertisement

Responsive Advertisement

கடந்த வாரம் தற்கொலை செய்து கொண்ட இலங்கை அகதி பற்றிய மேலும் பல புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன

லியோ சீமான்பிள்ளை என்ற 29 வயது இளைஞர் சனிக்கிழமை இரவு ஜீலோங் பிரதேசத்தில் தமது உடலில் பெற்றோல் ஊற்றிக் கொண்டு தீமூட்டிக் கொண்டதில், உடலில் 90 சதவீதம் தீக்காயங்களுக்கு உள்ளாகி மரணத்தைத் தழுவினார். 2013ஆம் ஆண்டு படகு மூலம் அவுஸ்திரேலியாவை அடைந்து தற்காலிக விசாவில் தங்கியிருந்த லியோ, தாம் திருப்பி அனுப்பப்படும் அச்சத்தில் பல தடவைகள் தற்கொலை செய்து கொள்ள முயன்றதாகவும், மனக்கிலேசம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிகிறது.
ஏபிசி நிறுவனத்தின் 7.30 நிகழ்ச்சியில் லியோவின் கடந்த காலம் பற்றிய தகவல்கள் வெளியாகியிருந்தன. இதில் கலந்து கொண்ட நண்பர்கள், லியோ தீவிர மனக்கிலேசம் காரணமாக மூன்று மாதங்களுக்கு முன்னர் மருத்துமனையில் அனுமிக்கப்பட்டு தீவிர மனக்கிலேசத்திற்காக சிகிச்சை பெற்றார் எனவும், அவர் இரு தடவைகள் தற்கொலைக்கு முயன்றார் எனவும் தெரிவித்தார்கள். அத்துடன், லியோ வசித்த பிரதேசத்தைச் சேர்ந்த பங்குத் தந்தைமார் தற்கொலை செய்து கொள்ளக்கூடிய நபராகக் கருதி அவரை கண்காணிப்பில் வைத்திருந்ததாகவும் நண்பர்கள் கூறியுள்ளனா.

Post a Comment

0 Comments