Home » » மட்டப்பளப்பு குருக்கள்மடம் ஜெகதா செல்வராசா ,அவர்களின் 'நாடகமும் அரங்கியல் துறை வளர்ச்சியில் அரங்க களப்பயிற்சியின் முக்கியத்துவம்' பற்றி பத்திரிகையில் வெளிடப்பட்ட சஞ்சிகை

மட்டப்பளப்பு குருக்கள்மடம் ஜெகதா செல்வராசா ,அவர்களின் 'நாடகமும் அரங்கியல் துறை வளர்ச்சியில் அரங்க களப்பயிற்சியின் முக்கியத்துவம்' பற்றி பத்திரிகையில் வெளிடப்பட்ட சஞ்சிகை

நாடகமும் அரங்கியல் துறை வளர்ச்சியில் அரங்க களப்பயிற்சியின் முக்கியத்துவம்

ஆற்றுக்கலைகளில் பிரதான பங்கு வகிக்கும் அரங்கியல் கலைகள் தனித்துவமானதாகவும் நேரடியாகத் தோடர்பு கொள்ளும் தன்மை கொண்டதாகவும் ஆற்றுவோரதும் பாரர்ப்போரதும் உடனிகழ்வுப் பரிமாற்றத்திர்கான தளமாகவும் தன்னை அடையாளப்படுத்துகிறது. இத்தகைய அரங்கியல் கலைகளில் மிகமுக்கிய பங்கு வகிக்கும் நாடகமும் அரங்கியல் துறை வளர;ச்சியில் அரங்கக் களப்பயிற்சியில் இன்றியமையாததொன்றாகத் திகழ்கிறது.
அரங்கக் களப்பயிற்சி என்பது பங்குபற்றுனா;களின் பங்களிப்புடனும். வெளிப்பாட்டுடனும் செய்வதனூடாகக் கூடிக்கற்றலுக்கான சிறந்த கற்கைச்சூழலாக அமைவதாகும். பட்டறிவு மூலம் கற்றலையே பட்டறை முறைமை நிறைவு செய்கிறது. நாடகமும் அரங்கியல் துறை வளா;ச்சியில் பல்வேறு விதமான அரங்கக் களப்பயிற்ச்சிகள் இடம்பெறுகின்றன.
Ø நாடகம் எழுதுதல் பயிற்சி
Ø நடிப்புப் பயிற்சி
Ø உடல் - குரல் - உளம் போன்றவற்றிற்கான பயிற்சி
Ø ஒளியமைப்பிற்கான பயிற்சி
Ø இசை அமைப்பதற்கான பயிற்சி
Ø காட்சி விதானிப்பிற்கான பயிற்சி
Ø நடனப்பயிற்சி
Ø சிறுவர் அரங்கு - ஜதார்h;த அரங்கு -  மோடி அரங்கப்பயிற்சிகள்
எனப் பல்வேறு விதங்களில் பயிற்சிகள் மேற்கொள்ளப் படுகின்றன.
அரங்கக் கலை வளச்சியில் களப்பயிற்சியானது அரங்கக்கலையின் பயில்வையும் - திறமையையும் அனுபவத்தையும் பயிற்சியில் பங்குகொள்வோர் பெற்றுக்கொள்வதற்கான சூழலையும் வாய்ப்புக்களையும் ஏற்படுத்திக் கொடுக்கின்றது. இவை களப்பயிற்சியின் வெளிப்படை நோக்கமாகக் காணப்படுகின்றது. நாடகத்துறையில் ஈடுபடுவதற்காக பயில முற்படும் ஒருவா; முதலில் தன்னைத்தான் கண்டுகொள்ள வேண்டும். தன்னைத்தான் விமர்சிக்கும் துணிவையும் திறனையும் பெறவேண்டும். முழுமையானதொரு இசைக்கோலத்தில் மிகச்சிறியதாயினும், மிக இன்றியமையாததொரு இசைக்குறி தான் என்பதை உணர வேண்டும். இவற்வை அறிவதாயின் அவன் தன் குறைகளை அறிந்துஇ கழைந்து தன் ஆற்றல்களை அறிந்து விருத்தி செய்து கொள்ளல் வேண்டும். தன்னையே தான் கண்டுபிடிக்கும் முறையில் ஈடுபடும் ஒரே பகட்டறையாளன் வெற்றிபெறும் பட்சத்தில் சிறந்ததொரு கலைஞனாக வளர்வதோடு மனிதம் நிறைந்ததொரு மனிதனாக உயர்வான். இவை அரங்கக்களப் பயிற்சியின் உள்ளுறை நோக்கமாகத் திகழ்வதோடு நாடகத்துறையின் முக்கியத்துவத்தினையும் எடுத்துக்காட்டுகின்றது.
இத்தகைய அரங்கக்களப் பயிற்சியானது அனைவரும் கூட்டாக இணைந்து கட்டுப்பாடுகளின்றி அனைவரும் நிர்ப்பந்தம் இன்றி தன்னெழுற்சியாகப் பங்கு கொள்ளும் சுதந்திரமா சூழலாக மாறுனகின்றது. இச் செயற்பாடுகளில் ஈடுபடும் போது குரோட்டவஸ்கியின் “தடைகள்”  ஸ்ரானிஸ்லாவஸ்கியின் “கூச்சங்கள்”  எனும் நெகிழ்ந்து கொடுக்காத நிலைகள் நடிகர்கள் மத்தியில் மாற்றமுறுகின்றது. 
நாடகத்துறை அரங்கக்களப் பயிற்சிகளில் மனதை ஒருநிலைப்படுத்தும் பயிற்சிஇ விளையாட்டுக்கள்இ கூட்டுச்செயடகைகள்இ கற்பனையாற்றலை தூண்டும் பயிற்சிஇ நெகிழ்ச்சியான எதற்க்கும் இசைந்து கொடுக்கும் உடல்இ கற்பனை வளம் நிறைந்த மனம்இ குரல் ஆகிய வற்றுக்கான பயிற்சிகள் மேற்கொள்வதன் மூலம் “போலச்செய்தல்” என்ற நடிப்பின் ஒரு கூறு துணை செய்கின்றது. இப் போலச்செய்தலுக்கு அடிப்படைக் காரணமாக விளங்குவது அரங்கக் களப்பயிற்சியே. எனவே நாடகத்துறை வளா;ச்சியில் அரங்கக்களப் பயிற்சியின் முக்கியத்துவத்தினை உணரலாம்.
அரங்கக் களப்பயிற்சிகளில் ஈடுபடும் ஒருவன் தன்னைத்தான் கண்டுகொண்டுஇ தன் ஆற்றலை இனங்கண்டுஇ தன்னைத்தான் விமர்சிக்கும் துணிவையும் திறனையும் பெற்றுஇ கூடிக்கருமமாற்றும் தன்னம்பிக்கையைப் பெற்றுஇ தன்னாற்றல்களை அறிந்து விருத்தி செய்துஇ முழுமையானதொரு மையப்புள்ளி தான் என்பதை உணர்ந்துஇ தன்னையே தான் கண்டுபிடிக்கும் நிலையில் உருவாக்கப்படுகின்றான். இவை நாடகத்துறை வளர்ச்சியில் மிக முக்கிய இடம் வகிக்கின்றது. 
மேலும் அரங்கக் களப்பயிற்சிகளில் அரங்க விளையாட்டுகள் மூலம் நடிகர்களாக பாகமாடுதல்இ புதிதாக நாடகமொன்றை ஆக்குதல் போன்ற செயற்பாடுகளுக்கூடாக நாடகங்களில் நடிக்கும் திறன்இ விளையாடும் திறன்இ பேசும் திறன் என்பன ஏற்படுகின்றது. இவை நாடகத்துறை வளர்ச்சியின் முக்கியத்துவத்தினை எடுத்துக்காட்டுகின்றது.
மேலும் புத்தளிப்புப் பயிற்சிகள் மூலம் பாத்திரங்களை திடீரென நடித்துக்காட்டக் கூடிய திறன் ஏற்படுகின்றது. அசைவு ஆட்டங்கள் பயிற்சிகளில் பாத்திர அசைவுகள் பயன்படுத்தப் படுகிறது. பேச்சுஇ பாடல் பயிற்சிகளில் சுயமாகப் பேசுதல்இ செந்தமிழில் பேசுதல்இ உரைநடையில் பேசுதல். கவிதையில் பேசுதல் போன்ற பயிற்சிகள் மூலம் நாடகப்பாத்திரங்கள் உரையாடல்களை கையாளும் விதம் பற்றி நோக்கப்படுகிறது. இவற்றின் மூலம் நாடகத்துறை வளா;சியில் அரங்கக் களப்பயிற்சியின் முக்கியத்துவம் பற்றி நோக்கலாம்.
மேலும் அரங்கக் களப்பயிற்சிகளில் ஈடுபடுவதன் மூலம் கற்பனை வளம். அவதானம்இ புலனுணர்வுஇ மனவெளுச்சிகள்இ தளாப்பீடுஇ கருத்தூன்றல்இ சிருஸ்டி இன்பம்இ சுதந்திர சிந்தனைஇ அழகியல் இன்பம்இ சமூக உணர்வு போன்ற பல அனுபவங்கள் ஏற்படுகின்றன. இவற்றின் மூலம் நாடகமும் அரங்கியல் துறை மென்மேலும் வளர்ச்சி பெறுவதனை நோக்கக்கூடியதாக உள்ளது. 
எனவே நாடகமும் அரங்கியல் துறைகளில் உள்ளடங்கும் கூத்துக்கள்இ மேடை நாடகங்கள் சிறுவர் நாடகங்கள்  ஜதார்த்த நாடகங்கள்இ மோடிமை நாட்கங்கள்ஸஇ நவீன நாடகங்கள் என்பவை மென்மேலும் வளர்ச்சி பெறுவதற்க்கு அரங்கக் களப்பயிற்சியானது மிக மிக முக்கியமான விடையமாகத் திகழ்கின்றது என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

ஆக்கம்
ஜெகதா செல்வராசா
நுண்கலைப் பட்டதாரி நாடகமும் அரங்கியலும்
சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகம்
கிழக்குப்பல்கலைக்கழகம்
இலங்கை.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |