Advertisement

Responsive Advertisement

பள்ளிவாசல் மீது இன்று அதிகாலையில் கல்வீச்சு! - கண்டி, குருந்துகொல்லவில் பதற்றம்

கண்டி - குருந்துகொல்ல பகுதியில் உள்ள ஜும்மா பள்ளிவாசல் மீது இன்று அதிகாலை இனந்தெரியாத நபர்கள் கல்வீச்சுத் தாக்குதல் நடத்தியுள்ளதால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தை அறிந்த பொலிஸார் உடனடியாக அவ்விடத்திற்கு விரைந்து பாதுகாப்பை உறுதி செய்துள்ளனர். தாக்குதலை அடுத்து பிரதேசவாசிகள் பள்ளிவாசல் பகுதியில் ஒன்றுகூடியிருந்தனர். கல்வீச்சுத் தாக்குதலால் பள்ளிவாசல் கண்ணாடிகள் மற்றும் சுவருக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இன்று வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையின் பின்னர் பேருவளை- அளுத்கம- தர்காநகர் தாக்குதல்களை கண்டித்து முஸ்லிம்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment

0 Comments