பிரதமர் நரேந்திர மோடியின் சம்பளம் பற்றிய விபரங்கள் வெளியாகியுள்ளன. அதில், உலக நாடுகளில் அதிக வேலைப்பளு கொண்ட இந்தியப் பிரதமருக்கே குறைந்த சம்பளம் என்று புள்ளிவிபரங்கள் நிரூபிக்கின்றன.
பிரதமருக்கு மாதம் ரூ.50 ஆயிரம் அடிப்படைச் சம்பளம். இதுதவிர, செலவினங் கள் படி, தினசரி படி மற்றும் அலுவலகப் படி உட்பட மொத்தம் மாதத்திற்கு ரூ.1 இலட்சத்து 60 ஆயிரம் வழங்கப்படுகிறது.
மேலும், பிரதமரின் உபயோகத்திற்கு கறுப்பு நிற பி.எம்.டபிள்யூ 7 வரிசைக் கார் அதிகபட்ச பாதுகாப்போடு வழங்கப்படுகிறது.
இந்த கார், குண்டு துளைக்காத வகையி லும் வெப்பத்தைத் தாங்கக்கூடிய வகையி லும் வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிட த்தக்கது.
மேலும், பிரதமர் ஓய்வுபெற்றதும் மாதம் ரூ. 20 ஆயிரம் ஓய்வூதியம் உண்டு. ஓய்வூதியம் குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை திருத்திய மைக்கப்படும்.
டில்லியில் வாழ் நாள் முழுவதும் தங்குவதற்கு வீட்டு வசதி செய்துதரப்ப டும். அந்த வீட்டுக்கு வாடகை, மின் கட்ட ணம், குடிநீர் வரி என எதுவும் விதிக்க ப்பட மாட்டாது. மேலும், ஐந்தாண்டுகளுக்கு முழு அலுவலகச் செலவுகள் வழ ங்கப்படும். இது, பின்னர் ஆண்டுக்கு ரூ. 6,000மாகக் குறைக்கப்படும் எனத் தெரிய வந்துள்ளது.
0 Comments