Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கனடா தேசிய நெடுஞ்சாலையை அதிர வைத்த 4 வாகனங்ளின் பயங்கர விபத்து

கனடாவில் உள்ள Whitby என்ற பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் ஒரே நேரத்தில் நான்கு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று பயங்கரமாக மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் மூன்று பேர் படுகாயம் அடைந்தனர்.
கனடாவில் உள்ள Whitby பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 401ல் நேற்று காலை 10.30 மணியளவில் ஒரே நேரத்தில் நான்கு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய பயங்கர விபத்து ஒன்று நடந்துள்ளது. இரண்டு கார்கள், ஒரு டிராக்டர் டிரைலர், மற்றும் ஒரு பேருந்து இந்த விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த ஒருவர் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பரிதாபமாக பலியானார். மூன்று பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இரண்டு பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகிறது.
இந்த விபத்து காரணமாக தேசிய நெடுஞ்சாலை 401ல் காலை முதலே போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. பின்னர் நிலைமை சீரானதும் மாலை 4.30 மணிக்கு பின்னர் போக்குவரத்துக்கு வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன. இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.



Post a Comment

0 Comments