மட்டக்களப்பு கோட்டைக்கல்லாறு பகுதியில் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியொன்று தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 1.30 மணியளவில் கோட்டைக் கல்லாறு சந்தை வீதியில் நிறுத்தப்பட்டிருந்த லொறியே இவ்வாறு தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர். முல்லைத்தீவில் இருந்து தேங்காய் வர்த்தகத்தில் ஈடுபடும் கோட்டைக் கல்லாறு சந்தை வீதியினை சேர்ந்த தங்கேஸ்வரன் என்பவரின் லொறியே இவ்வாறு எரிந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
|
நேற்று காலை தேங்காய் கொண்டுவந்து வியாபாரம் செய்து விட்டு மீண்டும் முல்லைத்தீவுக்கு இன்று காலை செல்லவிருந்த நிலையிலேயே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அயலவர்கள் அதிகாலை லொறி தீப்பிடித்து எரிவதாக தெரிவித்தபோது இந்த சம்பவம் தனக்கு தெரியவந்ததாக லொறியின் உரிமையாளர் தெரிவித்தார்.தீயினை அணைக்க முற்பட்டபோதிலும் லொறி முற்றாக எரிந்துவிட்டதாகவும் உரிமையாளர் தெரிவித்தார். தனிப்பட்ட வியாபார போட்டிகள் காரணமாகவே இந்த சம்பவம் நடைபெற்றிருக்கலாம் என களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர். லொறியின் பெறுமதி சுமார் 16 இலட்சம் ரூபா எனவும் உரிமையாளர் தெரிவித்தார். பொலிஸார் இது தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
|
0 Comments