
மட்டு மாநகரின் தென்பால் சகலவளங்களாலும் சிறப்புற்று விளங்கும் குருக்கள்மடம் பதியிலே இந்தியாவின் காஷ்மீர் தேசத்தில் இருந்து வருகை தந்த வணக்கத்துக்குரிய சுவாமிஜீ ஸ்ரீலஸ்ரீ சோமேஸ்வரானந்தகிரி அவர்களால் ஸ்தாபிக்கப்பட்டு அடியார்களுக்கு அருள் பாலித்துவரும் ஸ்ரீ கிருஸ்ணபெருமானுக்கு அலங்கார திருவிழா நடாத்த திருவருள் பாலித்துள்ளதால் நிகழும் மங்களகரமான விஜய வருடம் ஆனித்திங்கள் 12ம் நாள்(26.06.2014) வியாழக்கிழமை பூர்வாங்க கிரியைகளுடன் ஆரம்பமாகி ஆனித்திங்கள் 20ம் நாள் (04.07.2014) வெள்ளிக்கிழமை ஆலய கும்பாபிஷேகம் இடம்பெற்ற தினமான ஆனிஉத்தர நட்சத்திரத்தில் உதயம் 108 சங்காபிஷேகம் இடம்பெற்று அதனைதொடர்ந்து சமுத்திர தீர்த்தோற்சவம் நடைபெற்று பகல் அன்னதானத்துடனும் இஇரவு ஆஞ்சனேயர் பூசையுடனும் விழா இனிது நிறைவடையும்.
தினசரி மாலை 5.00மணிக்கு கிரியை நிகழ்வுகள் ஆரம்பமாகி அதனை தொடர்ந்து 6.30 மணிக்கு கூட்டுப்பிரார்த்தனை வழிபாடு நடைபெற்று இதனையடுத்து இரவு 7.30 மணிக்கு சமய சொற்பொழிவு ஆரம்பமாகும். பின்னர் ஆலய பூசையினை தொடர்ந்து இரவு 8.30 மணிக்கு திருவிழா ஆரம்பமாகும்.
விஸேடமாக யூலை 1ம்,2ம் திகதிகளில் மாலை 7.30மணி முதல் 8.30மணிவரை இந்தியாவில் இருந்து வருகைதந்துள்ள “வேதானந்த இன்ரநெஷனல் பவுண்டேசன்” தலைமை ஆச்சாரியார் சுவாமி வேதாந்தானந்தா அவர்களால் சிறப்பு சொற்பொழிவு நிகழ்த்தப்படும்.
03.07.2014 ம் திகதி வியாழக்கிழமை மாலை 7.00 மணிக்கு பக்தர்களுக்கு அருள்பாலிப்பதற்காக எம்பெருமான் முத்துச்சப்பறத்திலே ஊர்வலமாக எழுந்தருளுவார்.
0 Comments