மட்டக்களப்பு, கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஆயிலியடிச்சேனை கிராமத்தில் அக்கிராமத்தைச் சேர்ந்த 05 பிள்ளைகளின் தாயான ஜெயநாயகி முத்துவேல் என்பவர் மாடு குத்தியதால் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் படுகாயமடைந்த அவர் உடனடியாக சந்திவெளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அவர் வாழைச்சேனை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக சந்திவெளி வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வயலில் நின்றுகொண்டிருந்த இப்பெண்ணை மாடொன்று குத்தி காயப்படுத்திய நிலையில், அவருக்கு முதலுதவிச் சிகிச்சை அளித்து வைத்தியசாலையில் தாங்கள் அனுமதித்ததாக படையினர் தெரிவித்தனர்.
இவர் தற்சமயம் தேறி வருவதாக உறவினர்கள் கூறுகின்றனர்.
0 Comments