Home » » மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் தொடரும் வாகன நெரிசல்

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் தொடரும் வாகன நெரிசல்

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் வாகன நெரிசல் ஏற்பட்டு மாவட்ட செயலகம் அழகு கெட்டு காணப்படுகிறது. சிரமமும் ஏற்படுகிறது.  இதனால் பலர் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குவதாக பாதிக்கப்பட்டவர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
மாவட்ட செயலகத்தின் உள்ளகக் கணக்காய்வுப்பிரிவு பழைய கட்டத்தின் ஒரு பகுதியில் இயங்கி வந்தநிலையில் அதன் கூரைப்பகுதி உடைந்தமையினால் உள்ளகக் கணக்காய்வுப்பிரிவு உத்தியோகத்தர்களின் வாகனத் தரிப்புக்கென பயன்படுத்தப்பட்ட பகுதியை உடனடியாக அந்த இடதினை அலுவலகத்திற்கேற்றால்போல் அமைத்துக் கொண்டனர்.
அதனால் அந்த இடமும் இல்லாமல் போனது, அதன் பின்னர் மாவட்ட செலயகம் அமைந்துள்ள ஒல்லாந்தர் கோட்டையை அழகுபடுத்தும் செயற்திட்டத்தின் கீழ் ஒரு கட்டடத்தின் திருத்த வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன. அதனால் அவர்களுடைய வேலைகளுக்காக கோட்டையினுள் ஒரு குறிப்பிட்ட பகுதியை அவர்களது பாவனைக்காக எடுத்துக் கொண்டார்கள்.
இந்த நிலையில் மாவட்ட செலயகத்தின் அரைவாசிக்கும் மேல் பாவிக்க முடியாத நிலை தோன்றியுள்ளது. அத்துடன் கச்சேரியின் முன் பக்கம் ஏற்கனவே இருந்த வாகனத் தரிப்பிடமும் அகற்றப்பட்டவிட்டது.
இந்த நிலையில் மாவட்ட செயலகத்தின் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் கூட தமது வாகனங்களை நிறுத்துவதற்கு இடம் இன்றி சிரமப்படுகின்றனர்.

மோட்டார் சைக்கிள், கார் மற்றும் பெரிய வாகனங்களும் உள்ளேயே தரித்து நிற்க முயலுகின்றனர். அத்துடன், வெயில் வேளைகளில் வாகனங்கள் வெளியே நிறுத்தப்படுவதனாவ் வாகனங்கள் பாதிக்கப்படும் நிலையும் ஏற்படுவதாக கவலை தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில் மாவட்ட செயலகத்திற்குத் தேவைகள் நிமித்தம் வருபவர்கள் கூடு தம்முடைய வாகனங்களை மாவட்ட செயலகத்தினுள் நிறுத்திவிட்டு செல்வதனால் சிலருடைய வாகனங்களை வெளியே எடுக்க முடியா நிலை தோன்றுகின்றனது.

இதே வேளை மோட்டார் சைக்கிள் களில் வருபவர்கள் தாம் நினைத்தபடி நிறுத்திவிட்டு கென்டில்களை லொக் செய்துவிட்டுச் செல்வதனாலும் பிரச்சினைகள் தோன்றுகின்றன. தம்முடைய வாகனங்களைப் பாதுகாப்பது அவர்களுக்கு முக்கியமாக இருந்தாலும் அடுத்தவருக்குப் பாதகம் பிரச்சனை ஏற்படாத படி பாதுகாக்கலாமே என்பது பாதிக்கப்பட்டவர்களது கருத்தாக இருக்கிறது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |