Home » » நடமாடும் சேவையில் இலவச திருமண பதிவு

நடமாடும் சேவையில் இலவச திருமண பதிவு

மண்முனை மேற்குப் பிரதேச செயலகத்தினால் பாவற்கொடிச்சேனையில், செவ்வாய்க்கிழமை(03) நடத்தப்பட்ட நடமாடும் சேவையின்போது 14 பேருக்கு இலவச திருமணப் பதிவு செய்துவைக்கப்பட்டதுடன் 100 பேருக்கு யானை வெடியும் வழங்கிவைக்கப்பட்டது.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் 'நிறைவான இல்லம் வளமான தாயகம்' என்ற தொனிப் பொருளில் கிராமம் கிராமமாக வீடு வீடாக என்ற தேசிய வேலைத் திட்டத்தின் கீழ் நடைபெற்றுவரும் மக்களை வலுவூட்டும் தேசிய வேலைத்திட்டத்தினுடாக மண்முனை மேற்குப் பிரதேச செயலகத்தினால் பாவற்கொடிச்சேனை விநாயகர் வித்தியாலயத்தில் நடமாடும் சேவையொன்று முன்னெடுக்கப்பட்டது.

மண்முனை மேற்குப் பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர் தலைமையில் இடம்பெற்ற இந்நடமாடும் சேவையில், திருமணப் பதிவுச் சேவை, காணி, அடையாள அட்டை, திவிநெகும, சமூக சேவை, அடையாள அட்டை, சுகாதாரம், கல்வி, இலவச சட்ட ஆலோசனை, பொலிஸ், கால்நடை, வன ஜீவராசிகள், வீடமைப்பு எனப் பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டன.
இதன்போது இப்பகுதி மக்களின் முக்கிய பிரச்சினையாக காணப்பட்ட சட்ட ரீதியற்ற இளவயதுத் திருமணமும் அதனுடாக குழங்தைகளுக்கு பிறப்புப் பதிவு மேற்கொள்ளாதமை தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டது.
இதனுடாக சட்டரீதியற்ற முறையில் திருமணம் மேற்கொண்டு நான்கு குழந்தைகள் முதல் ஒரு குழந்தை வரை உள்ள தம்பதியினருக்கு இலவச சட்ட ஆலோசனை வழங்கப்பட்டதுடன் இலவச திருமணப் பதிவும் செய்துவைக்கப்பட்டது.

அத்துடன் பிறப்பு பதிவு மேற்கொள்ளாமல் உள்ள இவர்களது பிள்ளைகளுக்கு பிறப்பு பதிவு செய்வதற்கான நடவடிக்கையும் மெற்கொள்ளப்பட்டது. இலவச திருமணப் பதிவினை மேற்கொண்டு அவர்களுக்கு பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர் திருமணச் சான்றுகளை வழங்கிவைத்தார்.
இதேவேளை பாவற்கொடிச்சேனை, காந்திநகர், பன்சேனை ஆகிய பகுதிகளில் காட்டு யானைகளின் தொல்லையால் மக்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் கிராமத்துக்குள் புகும் யானைகளை விரட்டுவதற்காக 100 பேருக்க யானை வெடியும் வழங்கப்பட்டன.
               
               
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |