எரிபொருள் தயாரிப்புக்காக எதிர்வரும் 15 தினங்களுக்கு மாத்திரம் மசகு எண்ணெய் இருப்பில் உள்ளதாக கனியவளக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. கொழும்பு துறைமுகத்திற்கு ஆழ்கடலில் இருந்து மசகு எண்ணெய்யை விநியோகிக்கும் பாரிய குழாயில் அண்மையில் வெடிப்பு ஏற்பட்டது. குறித்த குழாயை மீளமைக்கும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் சுசந்த சில்வா தெரிவித்துள்ளார். 9 கிலோமீற்றர் தொலைவில் நங்கூரம் இடப்பட்டுள்ள கப்பலில் இருந்து 100 அடி ஆழத்தில் உள்ள குழாய் மூலமாக ஒருகொடவத்தைக்கு எரிபொருள் எடுத்துச் செல்லப்படுகின்றது.
|
பாரிய கடல் அலைகளின் தாக்கம் காரணமாக குழாய் மீளமைப்பு பணிகளை மேற்கொள்வதில் அசௌகரியம் எதிர்நோக்கப்படுவதாக கனியவளக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் சுசந்த சில்வா தெரிவித்தார். எனினும், நாட்டில் அன்றாட தேவைகளின் பொருட்டு போதுமான எரிபொருள் உள்ளதாக கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் சுசந்த சில்வா தெரிவித்துள்ளார்.
|
0 Comments