எல்பிட்டிய நகரிலுள்ள பஸ் தரிப்பிடத்திற்கு அருகில் பல்கலைக்கழக மாணவி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
21 வயதான பல்கலைக்கழக கலைப்பீட மாணவி ஒருவரே இவ்வாறு எல்பிட்டிய பஸ் தரிப்பிடத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த யுவதி கொழும்பு நோக்கி வருவதற்காக இன்று அதிகாலை 3 மணியளவில் வீட்டிலிருந்து புறப்பட்டமை விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
கூர்மையான ஆயுதம் ஒன்றினாலேயே இவர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
0 Comments