பாதுகாப்பற்ற மருத்துவ விடுதியில் சிகிச்சை பெற்றுவந்த வயோதிபர் இன்ற இரவு மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஆண்களுக்கான கண் நோயாளர் விடுதி 1வது மாடியில் அமைந்துள்ளது.
இந்த விடுதியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த மட் கன்னங்குடாவைச் சேர்ந்த 80 வயதுடைய கணபதிப்பிள்ளை என்றழைக்கப்படும் முதியவர் இன்று இரவு 8.30மணியளவில் மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
குறித்த நோயாளர் விடுதியியில் உள்ள யன்னல்கள் கிறில் இல்லாமல் பாதுகாப்பின்றி இருந்ததனால் மரணமடைந்த கண் பார்வையற்ற வயோதிபர் யன்னலை வெளியேறுகின்ற கதவு என எண்ணி யன்னல் வழியாக வெளியேறியபோதே குறித்த மரணம் ஏற்பட்டுள்ளதாகவும் மேலும் அறிய முடிகின்றது.
0 Comments