சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த கோச்சடையான் கடந்த 23ந் தேதி வெள்ளிக்கிழமை வெளியானது. உலகம் முழுவதும் 6 ஆயிரம் தியேட்டர்களில் திரையிடப்பட்டது. திரையிடப்பட்ட வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் மட்டும் 42 கோ ரூபாய் வசூலித்துள்ளது.இந்தியாவில் மட்டும் 30 கோடி ரூபாய். தமிழ்நாட்டில் 20 கோடி ரூபாய். வெளிநாடுகளில் 12 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இந்த வாரம் 100 கோடி ரூபாய் வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரஜினி ரசிகர்கள் மோசன் கேப்சன் டெக்னாலஜியை புரிந்து கொண்டு படத்தை ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.
இதுபற்றி ஈராஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் முதன்மை துணை தலைவர் நந்து அகுஜா கூறும்போது “படத்திற்கு நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிக வரவேற்பு கிடைத்து. முன்பதிவு எங்களை மலைக்க வைத்தது.
ரிலீஸ் அன்று காலை 5 மணி முதலே காட்சிகள் ஆரம்பமாகிவிட்டது. ரஜினி ரசிகர்கள் தம்ஸ் காட்டி படத்தின் வெற்றியை உறுதி செய்தனர். அவர்கள் தங்கள் தலைவரை புதுமையான வடிவத்தில் பார்த்தில் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள். தியேட்டரை நோக்கி வீசும் ரசிகர்கள் அலை தொடரும்” என்கிறார்.
0 Comments