Advertisement

Responsive Advertisement

மட்டக்களப்பு புதுக்குடியிருப்பில் குடைசாய்ந்த லொறி –பயணித்தோர் மயிரிழையில் தப்பினார்

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதுக்குடியிருப்பில் சீமேந்து ஏற்றிச்சென்ற லொறி குடைசாய்ந்ததில் அதில் பயணம் செய்தோர் மயிரிழையில் உயிர்தப்பியுள்ளனர்.

இன்று புதன்கிழமை காலை திருகோணமலையில் இருந்து சம்மாந்துறைக்கு சீமேந்து ஏற்றிச்சென்ற லொறியே இவ்வாறு குடைசாய்ந்துள்ளது.
இல்முனை-மட்டக்களப்பு பிரதான வீதியூடாக வந்தபோது புதுக்குடியிருப்பு முன்னைய விசேட அதிரடிப்படை முகாமுக்கு அருகில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதில் பயணம் செய்த லொறியின் சாரதி மற்றும் உதவியாளர் எதுவித காயங்களும் இன்றி மயிரிழையில் உயிர்தப்பியுள்ளனர்.

Post a Comment

0 Comments