பெந்தோட்டைப் பிரதேசத்தில் இன்று ஆமை விடும் நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொண்டு சிறப்பித்தார். பெந்தோட்டை பிரதேசத்துக்குச் சென்ற ஜனாதிபதிக்குக் கிடைத்த அழைப்பினை ஏற்று அவர் இந்தக் கடலாமைக் குஞ்சுகளை கடலுக்கு விடும் நிகழ்வில் கலந்துகொண்டார். பல நூற்றுக்கணக்கான ஆமைக் குஞ்சுகளைக் கடலில் விட்ட ஜனாதிபதி அப்பிரதேச மக்களுடன் அளவளாவினார். அத்துடன் கடலாமைகள் உற்பத்தி செய்யும் நிலையத்துக்கும் ஜனாதிபதி சென்று பார்வையிட்டார்.
0 Comments