கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி தேசியபாடசாலையில் இம்முறை கல்விப்பொது தராதர சாதாரணதரப்பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களுக்கான பாராட்டு நிகழ்வு கல்லூரி முதல்வர் எம்.ஸ் ரீபன் மத்தியு தலைமையில் கல்லூரி சிசிலியா மேரி அரங்கில் இடம்பெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக கல்முனை தமிழப்பிரிவு கோட்டக்கல்வி அதிகாரி பி.ஜெகநாதன் அவர்கள் கழந்து கொண்டு இந்நிகழ்வினை சிறப்பித்தார்.
இம்முறை இக்கல்லூரியில் இப்பரீட்சைக்கு 192 மாணவர்கள் தோற்றி 155பேர் 6 பாடங்களிலும் சித்தியடைந்ததுடன் 141மாணவர்கள் கல்விப்பொது உயர்தரம் கற்பதற்கு தகுதியையும் பெற்றிருந்தார்கள் என கல்லூரி முதல்வர் கூறினார்.
இக்கல்லூரியில் 7 மாணவர்கள் 9 பாடங்களிலும் ஏ தரச்சித்தியினையும், 3 மாணவர்கள் 8 பாடங்களில் ஏ தரச்சித்தியினையும். 13 மாணவர்கள் 7 பாடங்களில் ஏ தரச்சித்தியினையும் 5 மாணவர்கள் 6 பாடங்களில் ஏ தரச்சித்தியினையும் பெற்று இக்கல்லூரிக்கு பெருமை தேடித்தந்துள்ளார்கள்.
குறிப்பிட்ட மாணவர்களின் பெயர் விபரங்கள் - எஸ்.யவான்சன், பி.சி.டிலூஜன், எம்.ஹேனுஜன், ஏ.சாராவர்சிதா, ரீ.கௌசிக்கா, ஆர்.கிஷானுகா, எம்.யதுர்ஷா, பி.திகானா, எஸ்.சாரங்கனி, எம்.ஐ.எவ்.பர்கானா, வி.கௌதமன், கே.பிரதீக். எஸ்.யதார்த்தன், எஸ்.பிரஜானந், எஸ்.சாதுரியா, ரீ.கஸ்தூரி, ரீ.தர்ஷிக்கா, என்.அக்ஷயா, பி.ரக்சனா, ரீ.சரோமிகா, ரீ.ருதுஷா, எம்.நிதுர்ஷனா, ஈ.கோபிகா, ஜே.கிருஷ்ஹரி, எஸ்.டிருக்ஷன், வி.கிந்துஜன், ரீ.ஹரிப்பிரசான், பி.சுகன்சி ஆகியோருக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு பாராட்டப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.




0 comments: