Advertisement

Responsive Advertisement

8 கால்களுடன் பிறந்த அதிசய ஆட்டுக்குட்டி. Croatia நாட்டில் நடந்த அபூர்வ நிகழ்ச்சி. - Video

மத்திய ஐரோப்பாவில் உள்ள Croatia என்ற நாட்டில் ஒரு ஆடு எட்டு கால்களுடன் உள்ள குட்டி ஒன்றை ஈன்றுள்ளதால் அப்பகுதி மக்கள் அந்த குட்டியை பெரும் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Croatia  என்ற நாட்டில் Zoran Paparic என்பவர் தன்னுடைய பண்ணையில் சில ஆடுகளை வளர்த்து வருகிறார். இவரிடம் வளர்ந்து வரும் ஆடுகளில் Sarka என்ற பெயருடைய ஆடு சமீபத்தில் ஒரு குட்டியை ஈன்றது. இந்த குட்டியை பார்த்த Zoran Paparic அதிர்ச்சி அடைந்தார். காரணம் அந்த குட்டி ஆடுக்கு எட்டு கால்கள் இருந்தன. உடனே அவர் அருகில் உள்ள வீட்டில் உள்ளவர்களை அழைத்து வந்து அந்த அதிசய சம்பவத்தை காட்டினார்.



அந்த பகுதியில் உள்ள மக்கள் இந்த ஆட்டுக்குட்டியை ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர். இதுகுறித்து அந்த பகுதியில் உள்ள கால்நடை மருத்துவர் ஒருவர் கூறும்போது கருவில் இரட்டை ஆட்டுக்குட்டியாக உருவாகி, பின்னர் ஒரே குட்டியாக மாறியுள்ளதாக தெரிவித்தார். இந்த ஆட்டுக்குட்டிக்கு ஆண் மற்றும் பெண் தன்மை இரண்டு உள்ளதாகவும், கூறிய மருத்துவர், இந்த ஆட்டுக்குட்டி அதிக நாட்கள் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என்று தெரிவித்தார்.

எட்டு கால்களுடன் இந்த ஆட்டுக்குட்டி இருப்பதால் இதற்கு octogoat என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. கால்நடை மருத்துவர்கள் மூலம் மிக கவனமாக பாதுகாத்து வருகிறார் இந்த ஆட்டுக்குட்டியின் சொந்தக்காரர்  Zoran Paparic

Post a Comment

0 Comments