உயிரிழந்து பிறந்த குழந்தைக்கு ஆறு நாட்களுக்கு பிறகு மீண்டு உயிர் கிடைத்த சம்பவம் குருணாகல் வைத்தியசாலையில் நேற்று இடம் பெற்றுள்ளது.
ஆணைமடுவ - பெரியகுளம் பிரதேசத்தை சேர்ந்த சமிலா சாந்தனி ஜயதிலக என்ற பெண் கடந்த ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி மேற்படி குழந்தையை பிரசவித்துள்ளார்.
இதன் போது வைத்தியர்கள் குறித்த பெண்ணிடம் பிறந்த குழந்தை இறந்து பிறந்துள்ளது என தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து பெற்றோர் தமது இறந்த குழந்தைக்காக மத கிரியை ஒன்றினையும் மேற்கொண்டனர்.
இதேவேளை, குறித்த பெற்றோருக்கு குருணாகல் வைத்தியசாலையிலிருந்து தொலைபேசி அழைப்பினை மேற்கொண்ட வைத்தியர் டாக்டர் பாலித டி யாபா குழந்தை உயிருடன் இருப்பதனை தெரிவித்துள்ளார்.
வைத்தியர்களின் பெரும் அர்ப்பணிப்பின் மத்தியிலேயே இந்த குழந்தை காப்பாற்றப்பட்டுள்ளதாக டாக்டர் பாலித டி யாபா மேலும் தெரிவித்தார்.
0 Comments