முற்பிறப்பில் தன்னைக் கொலை செய்த கொலைகாரனைக் காட்டிக் கொடுத்ததுடன் தான் புதைக்கப்பட்ட இடத்தையும் காண்பித்து 3 வயதுச் சிறுவன் ஒருவன் சிரியாவில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளான். சிரியாவில் உள்ள கோலன் குன்றுப்பகுதியில் வசிக்கும் 'ட்ருஸ்' இனக்குழுவை சேர்ந்த அந்தச் சிறுவன் பிறக்கும்போது அவனது தலையில் சிவந்த நிறத்தில் நீண்ட கோடு போன்ற அடையாளம் இருந்துள்ளது.
அந்த இனத்தை பொறுத்த வரை அவ்வாறு தோன்றும் அடையாளம் முற்பிறவியை குறிக்கும் என்பது ஐதீகமாகும். அதை உண்மையென்று நிரூபிக்கும் விதமாக அந்த சிறுவன் பேசும் வயதை எட்டியவுடன் தனது முற்பிறவி இரகசியங்களை கூறியுள்ளான். தனது முற்பிறவிப் பெயரைக் கூறிய சிறுவன் அப்பிறவியில் கோடரியை கொண்டு ஒருவன் தன்னைத் தாக்கி கொனறான் எனத் தெரிவித்துள்ளான்.
தான் தங்கியிருந்த பகுதியை அந்தச் சிறுவன் கூற அவனை அந்த இடத்திற்கு மக்கள் அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சென்ற அவன் தான் வசித்து வந்த இடத்தை காண்பித்துள்ளான். அங்கிருந்த மக்கள், அந்த இடத்தில் வசித்து வந்தவர் நான்கு வருடங்களுக்கு முன் காணாமல் போனார் எனத் தெரிவித்தனர். ஆனால் தான் கொலை செய்யப்பட்டார் எனத் தெரிவித்த சிறுவன், தன்னை கொன்றவரையும் அடையாளம் காட்டினான்.
உடனடியாக கொலைகாரனின் முகம் வெளிறிப்போனது. ஆனாலும் அவன் தான் கொலை செய்யவில்லை என்று கூறினார். உடனே சிறுவன் தான் கொன்று புதைக்கப்பட்ட இடத்தையும் காண்பித்தான். அங்கிருந்து ஓர் ஆணின் மண்டை ஓடு மற்றும் கோடரியும் கண்டெடுக்கப்பட்டது. கொலை குறித்து ஆதாரம் சிக்கியதால் கொலைகாரன் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டான். இச்சம்பவம் சிரியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....!
0 Comments