Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

இலங்கையின் மூத்த ஆதிவாசி தலைவர் மரணம்

நான்கு தலைமுறைகளின் 105 பேர் பேத்திகளை கண்ட இலங்கையின் மூத்த ஆதிவாசி தலைவர் தனது 114 வயதில் காலமானார்.
தெய்யத்தகண்டிய ஹென்னானிகல ஆதிவாசிகளின் முன்னாள் தலைவரான தலாவரிகே களுஅப்பு நேற்று உயிரிழந்தார்.
14 பிள்ளைகளின் தந்தையான அவர் நான்கு தலைமுறைகளை கண்ட 104 பேரின் கொள்ளு பாட்டனார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவரது இறுதிக்கிரியைகள் எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமண ஆதிவாசி கிராமங்களில் வசித்து வந்த இவர் முன்னாள் மகாவலி அபிவிருத்தி அமைச்சர் காமினி திஸாநாயக்கவின் கோரிக்கையை ஏற்று மகாவலி காணியை பெற்று ஹெனானிகல பிரதேசத்திற்கு சென்று குடியேறினார்.
தமண பிரதேசத்தில் வேட்டையாடி வாழ்ந்து வந்த ஆதிவாசிகளை காமினி திஸாநாயக்க விவசாயத்தில் ஈடுபட செய்தார்.

Post a Comment

0 Comments