Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு முனைக்காடு அருள்மிகு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய புனராவர்த்தன மகா கும்பாபிஷேக விஞ்ஞாபனம்.


தென்னிலங்காபுரியென்றும் சீருடன் இராவணன் ஆண்ட தேசம் என்றும், வங்கக் கடலெனும் மாபெரும் ஆழியால் சூழப்பட்டு நவரெத்தினமும், நல்ல பசுமைபொருந்திய மணிகளும் விளைகின்ற எழில் கொஞ்சும்  தேசமாம் லங்காதுவீபத்தின் மட்டுமாநகரின் தெற்கே மாபெரும் கிராமமாகிய முனைக்காட்டூரினிலே முன்னோர்கள் ஸ்தாபிதம் செய்த முது தமிழ்ச்செல்வி, முத்தமிழரசி, "தமிழ்பெசுமிடமெல்லாம் இவள் சிலம்பொலி எழும்பும் தேசத்தரசி" அன்னை கண்ணகிக்கு அழிவடையா ஆலயம் அன்பர்கள் சேர்ந்து அமைத்து அழகிய கருவறையில் அமர்த்த எண்ணி ஆகம சாஸ்திரத் துணிவுடன் மங்கலமோங்கிய ஜயவருடத்தில் வருகின்ற உத்தராயண காலத்தில் வசந்தருதுவில் சூரியபகவான் உச்சம் கொடுக்கின்ற சித்திரை மாதம் 21ம் நாள்(04.05.2014) ஆதித்திய வாரமும் அமிர்தத்தை போழிகின்ற சந்திரன் பஞ்ச கலைகளுடன் நிறையும் திதியும் திருவாதிரை நட்சத்திரமும்  சித்தயோகமும் மிதுனலக்கினமும் கூடிய சுபமுகூர்த்த வேளையகிய காலை, 08மணி 43நிமிடம் தொடக்கம் 10மணி 43நிமிடம் வரையான காலப்பகுதிக்குள் அம்பாளை ஆலயத்தினுள் அமர்த்திக் கும்பாபிஷேகம் செய்ய அவளரோடு  துணிந்துள்ளோம். 

கிரியையாரம்பம்                    02.05.2014 வெள்ளிக்கிழமை

எண்ணெய்க்காப்பு                  03.05.2014 சனிக்கிழமை

மகா கும்பாபிஷேகம்            04.05.2014 ஞாயிற்றுக்கிழமை

சங்காபிஷேகம்                      17.05.2014 சனிக்கிழமை

Post a Comment

0 Comments