(19.05.2014) இரவு திருகோணமலையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த வான் ஒன்று மூதூர் பிரதேசத்திலுள்ள வாய்க்கால் ஒன்றில் குடைசாய்ந்ததில் நால்வர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் காயமடைந்த நால்வரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் காயமடைந்த நால்வரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அரச சேவைகள் ஐக்கிய தாதிமார் சங்கத்தின் கிழக்கு மாகாண அமைப்பாளர் என்.சசிகரன், மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்கள பிரதி பணிப்பாளர் இரா.ஹரிகரன் மற்றும் சட்டத்தரணி ஆரியசிவம் உட்பட நால்வர் இந்த விபத்தில் படுகாயமடைந்துள்ளனர்.
படுகாயமடைந்த தாதியர் சங்க கிழக்கு மாகாண அமைப்பாளருக்கும், மற்றுமொரு தாதிய உத்தியோகத்தருக்கும் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
காயமடைந்த அனைவரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்
0 comments: