Advertisement

Responsive Advertisement

இலங்கை கல்வி நிருவாக சேவை நேர்முகப்பரீட்சைக்கு தோற்றியவர்களில் 135பேர் தெரிவு

இலங்கை கல்வி நிருவாக சேவை தரம் 3 க்கு ஆட்சேர்ப்பு செய்வதற்காக நடாத்தப்பட்ட நேர்முகப் பரீட்சையிலிருந்து 135 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக பொதுச்சேவை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இப் தெரிவுப்பட்டியல் நேற்று பொதுச்சேவை ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியாகியது. நேர்முகப்பரீட்சை கடந்த 05ம் திகதி திங்கட்கிழமை முதல் கொழும்பு இசுருபாய கல்வியமைச்சில் நடைபெற்றது. 

 நேர்முகப்பரீட்சைக்கு தோற்றிய 140 பேரில், 107 பேர் சிங்கள இனத்தைச் சேர்ந்தவர்களாவர். மீதி 33 பேரில் 13 முஸ்லிம்களும் 20 தமிழர்களும் அடங்குவர். இந்த 33 பேரில் 11பேர்; வடக்கையும் 16பேர் கிழக்கையும் மீதி 06 பேர் ஏனைய மாகாணங்களைச் சேர்ந்தவர்களாவர். இலங்கை கல்வி நிருவாக சேவை தரம் 3 க்கு ஆட்சேர்ப்பு செய்வதற்காக நடாத்தப்பட்ட திறந்த போட்டிப்பரீட்சையில் 208 முதல் 242 வரையிலான புள்ளிகளைப்பெற்ற 140 பேர் மாத்திரமே தெரிவுசெய்யப்பட்டிருந்தனர் என கல்வியமைச்சின் உயரதிகாரியொருவர் தெரிவித்தார். 

 இவர்களுக்கான திறந்த போட்டிப்பரீட்சைகள் 2012 மற்றும் 2013 இல் இரண்டு தடவைகளில் நடாத்தப்பட்டது.முதற்பரீட்சையில் சித்திபெற்றவர்களே இரண்டாம் பரீட்சைக்குத் தோற்ற அனுமதிக்கப்படுவர் என்பது நியதி. அதிலும் தெரிவானவர்களுக்கே நியமனம் வழங்கப்படும். அதன்படி வயது பட்டம் செல்லுபடியாகும் திகதி போன்ற இன்னோரன்ன பல காரணங்களால் 05 பேர் தெரிவுசெய்யப்படவில்லை. தெரிவானவர்களுக்கு நியமனக்கடிதங்கள் வழங்கிவைக்கப்பட்டு மீப்பேயில் பயிற்சிவழங்கப்பட்டு பொருத்தமான இடங்கள் வழங்கப்படுமென அவ்வுயர் அதிகாரி தெரிவித்தார். 

கிழக்கு பரிட்சார்த்திகள். 
01. திருமதி தனுசியா ராஜசேகர் (காரைதீவு)
02. செல்வி.நேசராஜா வரணியா (காரைதீவு) 
03. சோதீஸ்வரன் சுரநுதன் (காரைதீவு) 
 04. திருமதி என்.எச்.றியாசா (மருதமுனை) 
05. எ.எம்.ஹன்சீன் ( சாய்ந்தமருது) 
 06. எம்.பி. மைதிலி (திருகோணமலை) 
 07. திருமதி பி.ஜிகானா (மருதமுனை) 
 08. திருமதி எம்.ஜே.பாத்திமா றிவ்கா (ஏறாவூர்) 
 09. ரி.ஜெயந்தன் ( திருகோணமலை) 
10. திருமதி. வி.நிதர்சினி (பாண்டிருப்பு-கல்முனை) 
 11. திருமதி எ.றிஸ்மியாபானு (ஓட்டமாவடி) 
 12. எ.ஜி.பஸ்மில் (பாலமுனை) 
 13. ஆர்.சுதர்சன் (களுவாஞ்சிக்குடி) 
 14. எஸ.எம்.ஹைதர்அலி (மத்தியமுகாம்) 
15. எ.எம்.றிசாத் (அக்கரைப்பற்று) 
 16. திருமதி.கே.ஜெயந்திமாலா (குறுமண்வெளி;) 

 வட மாகாணம் 
 01. திருமதி ஆர்.ஹம்சத்வனி ( யாழ்ப்பாணம்) 
02. திருமதி .எம்.நீரஜா ( நல்லூர்) 
 03. செல்வி. ரி.தர்மிகா(யாழ்ப்பாணம்) 
 04. ஜே.ஜெனிற்றன்(வவுனியா) 
 05. செல்வி கே.ராதிகா (கரவெட்டி) 
 06. திருமதி எஸ்.ஜனனி(அல்வாய்) 
07. ஆர்;.செந்தில்மாறன்(யாழ்ப்பாணம்) 
08. திருமதி.ஏ.எவோன்(மன்னார்) 
09. எம்.தெய்வேந்திரா (பருத்தித்துறை) 
 10. ரி.பால்ராஜ்(பருத்தித்துறை) 
11. எம்.ஜெகதீஸன்(யாழ்ப்பாணம்)

Post a Comment

0 Comments