Advertisement

Responsive Advertisement

மட்டக்களப்பு ஓட்டமாவடியிலுள்ள வர்த்தக நிலையங்களில் சோதனை

மட்டக்களப்பு, ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவிலுள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் உணவகங்களில் செவ்வாய்க்கிழமை (20) மேற்கொள்ளப்பட்ட திடீர்ச் சோதனையின்போது, 06 வர்த்தக நிலையங்களிலிருந்து பாவனைக்கு உதவாத பொருட்களை கைப்பற்றியதாக ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் ஏ.எம்.நௌபர் தெரிவித்தார்.
அத்துடன், மேற்படி வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களை எச்சரித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இதன்போது 45 கடைகள் சோதனையிடப்பட்டன. கைப்பற்றிய பாவனைக்கு உதவாத பொருட்களை அழித்துள்ளதாகவும் அவர் கூறினார். 

ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.ரீ.எம்.நஜீப்கானின் வழிகாட்டலும்; மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஏ.எம்.நௌபர் தலைமையிலும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களும் மட்டக்களப்பு பொதுச் சுகாதார பயிற்சி மாணவர்களும் இச்சோதனையை மேற்கொண்டர்.
               

Post a Comment

0 Comments