ஐ.பி.எல். போட்டி முடிந்த பின்னர் இந்திய அணி குறுகிய காலப்பயணமாக பங்களாதேஷ் சென்று 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது.
ஜூன் 15, 17, மற்றும் 19 ஆகிய திகதிகளில் ஒருநாள் போட்டிகள் டாக்காவில் நடக்கிறது. இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு முன்பு பங்களாதேஷுடன் இந்திய அணி விளையாடுகிறது.
பங்களாதேஷ் போட்டிக்கான இந்திய அணி இந்த மாதம் இறுதியில் பெங்களூரில் தேர்வு செய்யப்படும் என்று இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் சஞ்சய் பட்டேல் தெரிவித்தார்.
தலைவர் தோனி, வீராட் கோலி ஆகியோருக்கு இந்தப் பயணத்தில் ஓய்வு கொடுக்கப்படுகிறது. இதனால் இந்த தொடருக்கு புதிய தலைவர் நியமிக்கப்பட உள்ளார். ரோகித்சர்மா, சுரேஷ் ரெய்னா, அஸ்வின் ஆகியோரில் ஒருவர் தலைவராக பதவியை பெறலாம். இதில் ரோகித்சர்மா ஐ.பி.எல். போட்டியில் தலைவராக இருந்த அனுபவம் இருப்பதால் அவருகே அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
0 Comments