Advertisement

Responsive Advertisement

11 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பிக்கு கைது.

சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய நிக்கவெரட்டிய சேனாநாயக்கபுர விகராதிபதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஹலம்ப பிரதேசத்தைச் சேர்ந்த 11 வயதுடைய சிறுமி ஒருவரையே குறித்த விகராதிபதி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளதாகவும் சிறுமி தற்போது நிக்கவெரட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட விகராதிபதி தொடர்பில் ஏற்கனவே பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருந்ததாக தெரிவிக்கும் பொலிஸார் குறித்த நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். 

Post a Comment

0 Comments