அட்டன் பகுதிக்கு ஹெரோயின் போதை பொருளை கொண்டு வந்து இளைஞர்களுக்கு விற்பனை செய்யவிருந்த குறித்த இளைஞன் சந்தேகத்தின்பேரில் அட்டன் பொலிஸாரால் இன்று 22.04.2014 மாலை அட்டன் மல்லியப்பு சந்தியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
அட்டன் மல்லியப்பு சந்தியில் குறித்த இளைஞன் போதை பொருளை மற்றொரு இளைஞனுக்கு விற்பனை செய்யவிருந்த வேளையில் அட்டன் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் படி அவ்விடத்திற்கு விரைந்து சென்ற பொலிஸார் அவரை கைது செய்ய முற்பட்ட போது ஹெரோயின் போதைபொருளை குறித்த இளைஞன் அருகாமையில் உள்ள அட்டன் ஆற்றில் வீசியுள்ளார்.
எனினும் ஆற்றிற்குள் வீசிய போதைபொருளை அட்டன் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்த சந்தேக நபர் அட்டன் நோர்வூட் பகுதியில் உள்ள 22 வயதுடைய இளைஞன் என தெரியவந்துள்ளது.
இவர் பல நாட்களாக போதை பொருளுக்கு அடிமையுள்ளதாகவும் போதை பொருளை விற்பனை செய்து வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைது செய்த சந்தேக நபரை 23.02.2014 அன்று அட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கைகள் எடுத்திருப்பதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
0 Comments