அமெரிக்காவை சேர்ந்த பிரபல பொப் பாடகர் ஆண்ட்ரி ஜான்சன் 1996 ஆம் ஆண்டு வு டாங் கிலான் (Wu-Tang Clan) என்ற பொப் ஆல்பத்தை ரிலீஸ் செய்து பெரும்புகழ் பெற்றவர்.
2004 ஆம் ஆண்டு அவர் தயாரித்து வெளியிட்ட நார்த் ஸ்டார் (Northstar) என்ற ஆல்பம் விற்பனையில் சாதனை புரிந்தது.
நேற்று தெற்கு ஹொலிவுட் பகுதியில் கூல்பேக்ஸ் அவின்யூ பிளாக்கில் தங்கியிருந்த குடியிருப்பு வீட்டில் ஆண்ட்ரி மிகவும் சோகமாக காணப்பட்டுள்ளார்.
அவருடைய நண்பர்கள் அவரை விசாரித்ததில் ஏதும் சொல்லாமலே இருந்துள்ளர். பின்னர் திடீரென பழங்கள் நறுக்க வைத்திருந்த கத்தியை எடுத்து தனது ஆணுறுப்பை வெட்டி துண்டாக்கினார்.
இதனால் வலி தாங்க முடியாத அவர் இரண்டாவது மாடியின் பல்கனியில் இருந்து கீழே விழுந்து தற்கொலைக்கு முயன்று உள்ளார். அவருடைய ஆண்உறுப்பு வெட்டு பட்டு துண்டாகி விட்டது.
உயிருக்கு போராடிய அவரை அவருடைய நண்பர்கள் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது.
அவர் இன்னும் அபாய கட்டத்தை தாண்டவில்லை என மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.
அவர் உயிர் காப்பாற்றப்பட்டாலும், அவருடைய ஆணுறுப்பை மீண்டும் பொருத்தமுடியாது என மருத்துவர்கள் கூறிவிட்டனர். அவர் எதற்காக இந்த முடிவு எடுத்தார் என்று தெரியவில்லை.
0 Comments