கிழக்கு பல்கலைக்கழகத்தின் 18வது பட்டமளிப்பு விழா இன்று கிழக்கு பல்கலைக்கழகத்தின் நல்லையா மண்டபத்தில் கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் கலாநிதி கிட்ணன் கோவிந்தராஜா தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில் உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
இன்று காலை 9.00மணிக்கு ஆரம்பமான இந்த பட்டமளிப்பு விழாவானது மூன்று சுற்றுக்களாக நடைபெற்றது.
இந்த பட்டமளிப்பு விழாவின்போது 755பேர் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டதாக உபவேந்தர் தெரிவித்தார்.
இதன்போது பல்கலைக்கழகத்தில் சிறப்பாக செயற்பட்ட நான்கு மாணவர்களுக்கு தங்க விருதுகளும் சிறப்பாக செயற்பட்டவர்களில் 10பேர் தெரிவுசெய்யப்பட்டு பண பரிசுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டதாகவும் உபவேந்தர் தெரிவித்தார்.
0 Comments