மட்டக்களப்பு. வாழைச்சேனை பிரதேசத்தில் குடியிருப்பு காணியொன்றில் இருந்து கைக்குண்டொன்றை மீட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.
கோராவெளி வீதி வாழைச்சேனையைச் சேர்ந்த நா.கருணாநீதி என்பவரின் வளவினுள் புதிதாக மலசலகூடம் கட்டுவதற்கான குழி வெட்டும் பணியில் தொழிலாளர்கள் இன்று சனிக்கிழமை ஈடுபட்டிருந்தனர்.
இதன்போது மர்மப்பொருள் ஒன்று காணப்பட்டது.இதுதொடர்பில் வாழைச்சேனை பொலிசாருக்கு தகவல் வழங்கியிருந்தனர். இதனையடுத்தே குண்டு செயலிழக்க செய்யும் பிரிவினர் ஸ்தலத்திற்கு விரைந்து குண்டை செயலிழக்க செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
0 Comments