மாயமான மலேசிய விமானத்தின் சிக்னல் இந்தியப் பெருங்கடலில் தென்பட்டுள்ளதாக சீனா செய்தி வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து சீனா சென்ற மலேசிய விமானம் கடந்த 8ம் திகதி மாயமான முறையில் காணாமல் போனது.இந்த விமானம் இந்தியப்பெருங்கடலில் விழுந்து விட்டதாக மலேசியி பிரதமர் அறிவித்ததைத் தொடர்ந்து 24 நாடுகள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டன.தற்போது இந்தியப் பெருங்கடலின் கடலுக்கடியில் இந்த தேடுதல் வேட்டையானது தொடர்கிறது.
இந்நிலையில் விமானத் தேடுதலில் ஈடுபட்ட சீனாவின் Haixun 01 என்ற கப்பலானது கடலில் 37.5 Hz சிக்னல் தென்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. இந்த சிக்னல் தென் அட்ச ரேகையிலிருந்து 25 டிகிரியிலும், கிழக்கு அட்ச ரேகையிலிருந்து 101 டிகிரியிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.மாயமான மலேசிய விமானத்தின் சிக்னலாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாக சீனா செய்தித்தாள் தகவல் தெரிவித்துள்ளது.
0 Comments