தென் கொரிய கப்பல் மூழ்கும்போது உயிர் காப்பு கவசத்தை தனது நண்பனுக்கு அளித்துவிட்டு உயிரை விட்டுள்ளான் சக மாணவன்.
தென்கொரிய தலைநகர் சியோலுக்கு அருகே உள்ள இன்செயான் துறைமுகத்தில் இருந்து, ஜெஜூ தீவுக்கு 475 பேருடன் சென்ற கப்பல் கடந்த வாரம் புதன்கிழமை அன்று நடுக்கடலில் மூழ்கியது.
இந்த கப்பலில் பயணம் செய்தவர்களில், அன்சன் பகுதியை சேர்ந்த பள்ளிக்கூட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் என 339 பேரும் அடங்குவர்.மாயமானவர்களை மீட்கும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபத்தில் சிக்கி மூழ்கியவர்களில் 146 உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன.
தென்கொரியாவின் தென்மேற்கு கடற்கரையில் அதிக குளிரில் கப்பல் நீருக்குள் மூழ்க தொடங்கியபோது, ஜங் சாவூங் என்ற 17 வயது மாணவனுக்கு உயிர் காக்கும் கவசம் கிடைத்துள்ளது.
எனினும், தன் அருகே பயத்தில் நடுங்கி கொண்டிருந்த இருந்த நண்பனுக்கு அந்த கவசத்தை வூங் அளித்து காப்பாற்றினான்.
ஆனால், வூங்கிற்கு உயிர் தப்பும் அதிர்ஷ்டம் இல்லை. இதனை அறிந்த அந்த மாணவனின் தாய், என்னால் நம்ப முடியவில்லை என்று கதறி அழுததுடன், தனது மகன் படித்த பள்ளி கூடத்தின் மேஜையில் சரிந்து விழுந்துள்ளார்.
சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறும்போது, ஜங் ஒரு ஹீரோ என்று கூறியுள்ளனர்.
தற்போது மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
0 Comments