Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு ஓந்தாச்சிமடம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த சக்தி விழா

மட்டக்களப்பு ஓந்தாச்சிமடம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த உற்சவம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (29) மாலை ஸ்ரீ வடபத்திரகாளியம்மன் ஆலயத்திலிருந்து அம்மனை எழுந்தருளப்பண்ணி கதவு திறத்தலுடன் ஆரம்பமாகி திங்கட்கிழமை இரவு (05) சர்க்கரைப் பொங்கலுடன் நிறைவுபெறும்.
புதன் (30) மற்றும் வியாழன் (01) கிழமைகளில் காலை விசேட ஆராதனையைத் தொடர்ந்து மாலையில் ஊர்காவல் பண்ணுதல் இடம்பெறும்.
வெள்ளிக்கிழமை (02) பிற்பகல் ஸ்ரீ அரசடி விநாயகர் ஆலயத்திலிருந்து வாழைக்காய் எடுத்துவந்து பழுக்கப்பபோடுதல்
சனிக்கிழமை (03) மாலை முத்துச்சப்பர ஊர்வலம்

ஞாயிற்றுக்கிழமை (04) பிற்பகல் விநாயகப் பானைக்கு நெல்குற்றுதல்
திங்கட்கிழமை காலை சக்தி யாகம், அபிஷேகம், புரண கும்பம் நிறுத்துதல்,விநாயகப்பானை எழுந்தருளப் பண்ணுதல், காத்தான் கன்னிமார் வைத்தல் மற்றும் அம்மனுக்கு பூஜை ஒப்புக்கொடுத்தல் என்பன இடம்பெறும்.
கிரியைகளை ஆலய பிரதம குரு விஸ்வப்பிரம்மஸ்ரீ ஏ. குமாரலிங்கம் குரு தலைமையில் ஸ்ரீ கற்பக விக்னேஸ்வரர் தேவஸ்தான பிரதம குரு சிவஸ்ரீ கு. நல்லராசாக் குருக்கள் நிகழ்த்துவர்.

Post a Comment

0 Comments