Advertisement

Responsive Advertisement

மட்டக்களப'பு மண்முனை பாலத்தின் இரு மருங்கிலும் இருள்மயம்

கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்பட்ட மண்முனை பாலத்தை சூழவுள்ள பிரதேசங்கள் இருளில் மூழ்கியுள்ளதால் மாலை ஆறு மணிக்குப்பின்னர் பயணத்தை மேற்கொள்ளும் வாகன சாரதிகளும் துவிச்சக்கரவண்டியில் செல்பவர்களும் பாதசாரிகளும் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டுவருகின்றனர்.
மண்முனை பாலத்தில் மாத்திரம் நவீன மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ள போதிலும் பாலத்தின் பாலத்தின் முடிவிலிருந்து  மகிழடித்தீவு சந்திவரையும் மறுமுனையில் கல்முனை – மட்டக்களப்பு பிரதான வீதிவரையும் தெருவோர மின்விளக்குகள் பொருத்தப்படவில்லை.
இதனால் இரவு நேரங்களில் இப்பிரதேசங்கள் பாரிய இருள்மயமாக காட்சி தருகிறது. வீதி விபத்துக்கள் மற்றும் வழிப்பறிகளும் இ;டம்பெறலாமென பயணிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
மண்முனை பாலம் திறக்கப்படுவதற்கு  முன்னர் இப்பிரதேசங்களில் ஆறு மணிக்குப்பின்னர் படகு பாதை சேவைகள் இடம் பெறுவதில்லை. அதனால்  இப்பகுதியூடாக வாகனங்கள் செல்வதில்லை ஆனால் தற்போது பாலம் திறக்கப்பட்டுள்ளமையால் தினமும் இரவு நேரங்களில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன.
எனவே இப்பிரதேசங்களில் தெருவோர மின் விளக்கு வசதிகளை ஏற்படுத்துமாறு உரிய அதிகாரிகளிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Post a Comment

0 Comments