Advertisement

Responsive Advertisement

மட்டக்களப்பு ஆரையம்பதியில் சிலருக்கு இடையில் ஏற்பட்ட மோதல் - ஒருவா் பலி - வீடுகள் அடித்துடைப்பு (புகைப்படங்கள்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதியில் கடந்த 15திகதி இரவு தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர் உயிரிழந்ததை தொடர்ந்து அவரை தாக்கியதாக கருதப்படுவோரின் வீடுகள் மீது நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.


இது தொடர்பில் தெரியவருவதாவது,

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி திருநீற்று கேணி  கிழக்கை சேர்ந்த கிருஷ்ணகுமார் பிரகாஷ்  (வயது 26) இவர் கடந்த 15ஆம் திகதி இரவு கடைக்கு சென்று வீடு திரும்பும் வழியில் சிலர் இவருடன் முன் விரோதம் காரணமாக முரன்  பட்டு பொல்லுகளால் தாக்கி  உள்ளனர்.

பலத்த தாக்குதலுக்கு உள்ளான இவரை ஊர் மக்கள்  ஆரையம்பதி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர் . அதன் பின் மட்டக்களப்பு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டார் . இவர் பலத்த தாக்குதலுக்கு உள்ளனதால் மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார் . 
கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இவர் சிகிச்சை பலன் இன்றி நேற்று ஞாயிற்றுக்கிழமை  இரவு காலமானார். தற்போது இவரின் சடலம் கண்டி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது .

இதேவேளை உயிரிழந்தவரை தாக்கியவர்கள் வீட்டில் இருந்து தலை மறைவனதால் ஆத்திரமுற்ற மக்கள் இவர்களின்  வீடுகளை தாக்கி சேதப்படுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது .

தாக்குதலுக்குள்ளாகி இறந்தவர் மேசன் தொழில் செய்துவருபவர் எனவும் திருமணமானவர் என்பதுடன் இவருக்கு ஒரு குழந்தையும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம் இந்த சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸாரும் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்









Post a Comment

0 Comments