மட்டக்களப்பு தாழங்குடாவில் உள்ள கல்வியியல் கல்லூரியின் பெண்கள் விடுதியின் தங்குமிடங்களின் கதவுகள் உடைக்கப்பட்டு அங்கிருந்த பெண்களின் ஆடைகள் வெளியில் வீசப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
கல்லூரி விடுமுறையில் சென்ற மாணவிகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுதிக்கு திரும்பியபோது தமது விடுதியின் கதவுகள் உடைக்கப்பட்டு உடைகள் வெளியில் வீசப்பட்டுள்ளதை கண்டு கல்லூரி முதல்வருக்கு அறிவித்துள்ளனர்.
இது தொடர்பில் விசாரணைகள் நடைபெற்றுவருவதாகவும் வெளியில் இருந்துவந்துள்ளவர்களே இதனை மேற்கொண்டிருக்கலாம் எனவும் கல்வியியற்கல்லூரி வட்டாரங்கள் தெரிவித்தன.
0 Comments