Home » » மட்டக்களப்பு வாழைச்சேனை கறுவாக்கேணியில் ஐஸ் உற்பத்தி நிலையம்

மட்டக்களப்பு வாழைச்சேனை கறுவாக்கேணியில் ஐஸ் உற்பத்தி நிலையம்

மட்டக்களப்பு, வாழைச்சேனை, கறுவாக்கேணியில் ஐஸ் உற்பத்தி நிலையம் ஒன்றினை கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரட்ன வைபவரீதியாக புதன்கிழமை திறந்து வைத்தார்.
கூல் மேன் ஐஸ் உற்பத்தி நிலையம் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த நிலையத்தின் திறப்பு விழா நிகழ்வானது, தொழில் அதிபரும் மேற்படி நிறுவனத்தின் உரிமையாளருமான ஆசிரி திபுது பெரேரா தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சின் செயலாளர் டாக்டர் திசாநாயக்க, மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரி டொமின்கோ ஜோர்ஜ், வாழைச்சேனை மீன்பிடி துறைமுக முகாமையாளர் எஸ்.எஸ்.கெட்டிகே மற்றும் வாழைச்சேனை பிரதேச சபைச்செயலாளர் எஸ்.எம்.சிஹாப்தீன் ஆகியோர்கள் கலந்துகொண்டனர்.
இந்த ஐஸ் உற்பத்தி நிலையம் மூலம் நாளொன்றிக்கு 34 மென்றிக் தொன் ஐஸ் உற்பத்தி செய்யமுடியும் என்று மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரி டொமின்கோ ஜோர்ஜ் தேரிவித்தார்.

                   
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |