Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ஜனாதிபதி சனிக்கிழமை கிழக்குப் பல்கலைக் கழகம் வருகிறார்

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வந்தாறுமூலை வளாகத்தில் 555 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட புதிய பிரமாணடமான நுழைவாயில் மற்றும் புதிய கட்டங்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச எதிர்வரும் 19ஆம்திகதி சனிக்கிழமை பகல் திறந்து வைக்கிறார்.
கிழக்குப் பல்கலைக்கழக துணைவேந்தர் கலாநிதி கிட்னன் கோபிந்தராஜா தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்வுகளில் உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்கா மற்றும் உற்பத்தி ஊக்குவிப்பு அமைச்சர் பசீர் சேகுதாவூத், மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் வி.முரளிதரன், பொருளாதார பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும், ஜனாதிபதி ஆலோசகரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான சி.சந்திரகாந்தன் மற்றுமு; அரசியல்வாதிகளும் அதிதிகளாகக் கலந்து கொள்கின்றனர்.
7 மில்லியன் செலவில் அமைக்கப்பட்ட புதிய நுழைவாயில், 230 மில்லியன் செலவில் அமைக்கப்பட்ட வர்த்தக முகாமைத்துவ பீட கட்டடத் தொகுதி, 121 மில்லியன் செலவில் அமைக்கப்பட்ட கலை கலாசார பீட கட்டடத் தொகுதி, 171 மில்லியன் செலவில் அமைக்கப்பட்ட பிரதான நூலக கட்டடத் தொகுதி, 25 மில்லியன் செலவில் அமைக்கப்பட்ட உள்ளக விளையாட்டரங்கு என்பன அடங்கு கின்றன.
                    
                    

Post a Comment

0 Comments