ஆலையடிவேம்பு பிரதேசத்தில் மரத்தில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட நிலையில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் நேற்று சனிக்கிழமை காலையில் மீட்கப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிசார் தெரிவித்தனர்
இவ்வாறு ஆலையடிவேம்பு நாவற்காடு கோபால் கடை வீதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான 2 பிள்ளையின் தந்தையான 35 வயதுடைய சுப்பையா அசோக்குமார் என்பவரே உயிரிழந்துள்ளார்.
இது பற்றி தெரியவருவதாவது
இச் சம்பவத்தில் உயிரிழந்தவர் மனைவிக்கிடையே குடும்பத்தகராற்றினால் மனைவி பொலிஸ் நிலையத்தில் இவருக்கு எதிராக மறைப்பாடு செய்திருந்தார் இதனையடுத்து இவர் தலைமறைவாகி பின்னர் எறவினர் வீட்டில் தங்கியிருந்துள்ள நிலையில் நீதிமன்றத்தில் வழக்கு தாக்குதல் செய்யப்பட்டதையடுத்து நேற்று வெள்ளிக்கிழமை நீதின்றத்தில் வழக்கிற்கு ஆஜரான நிலையில் இவரை மனைவி பிள்ளைகளின் வாழ்க்கைச் செலவிற்காக 7 ஆயிரம் ரூபாவை மாதாந்தம் செலுத்துமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில் வழமைபோல நேற்று இரவு 8.00 மணிக்கு மகளுடனும் பிள்ளைகளுடனும் நித்திரைக்கு சென்ற தாயார் சம்பவதினமான இன்று காலை 6.00 மணியளவில் வீட்டிற்கு வெளியில் வந்த தாயார் வீட்டின் மாமரத்தில்; மருமகன் கயிற்றில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளாதை கண்டுள்ளார் இதனையடுத்து சத்தமிட்டதையடுத்து அயலவர்கள் மகள் வெளியில் வந்துள்ளனர்.
இச் சம்பவத்தில் உயிரிழந்தவர் மனைவியாருக்கு தெரியாமல் வீட்டின் காணிக்குள் நுளைந்தே இவ் தற்கொலையை செய்துள்ளார் என பொலிசாரின் ஆரம்பவிசாரணையில் தெரியவந்துள்ளது
இது தொடர்பானவிசாரணைகளை அக்கரைப்பற்று பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்
0 Comments