அக்கரைப்பற்று கோளாவில் பிரதேசத்தில் 16 வயது சிறுவனை கத்தியால் குத்தி தலைமறைவாகி வந்த 19 வயது இளைஞனை இன்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்து பொலிஸ்பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிசார் தெரிவித்தனர்
கோளாவில் 3 பிரிவு முத்திலிங்கம் வீதியைச் சேர்ந்த சாகாம வீதியில் கடைகட்டிடத் தொகுதி ஓன்றின் உரிமையாளரின் 16 வயதுடைய மகனான லதாகரன் ஷஜந்; கடந்த மாதம் 28 ம் திகதி இரவு 8.00 மணியளவில் கடைகட்டிடத் தொகுதிக்கு சென்றபோது அங்கிருந்த இளைஞர் ஒருவர் இவர் மீது திடீரென கத்தியால் வயிற்றில்; குத்திவிட்டு தப்பிஓடியுள்ளார் இதனையடுத்து படுகாயமடைந்தவரை அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்
இச் சம்பவத்தில் கத்தியால் குத்திய ஆலையடிவேம்பு இத்தியடி பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயது இளைஞர்; தலைமறைவாகிவந்த நிலையில் அவரை இன்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்த பொலிஸ்பிணையில் விடுவித்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்
இது தொடர்பான விசாரணையை அக்கரைப்பற்று பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்
0 Comments