Advertisement

Responsive Advertisement

விமான விபத்து- போலி பாஸ்போர்ட்டில் 4 பேர் பயணம்? திட்டமிட்ட சதிச் செயலா?

மலேசிய விமானம் விபத்திற்குள்ளானதில் பயங்கரவாத அமைப்புகளின் கைவரிசை காரணமாக இருக்குமோ என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது.மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைவர் பீஜிங்கிற்கு சென்ற மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் நடுவானில் மாயமாகிவிட்டது.
இதனைத் தொடர்ந்து இந்த விமானம் கடலில் விழுந்ததில் பயணம் செய்த 239 பேர் இறந்து விட்டதாக தகவல்கள் வெளியானது.இந்நிலையில் இதுகுறித்து மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் நடத்திய விசாரணையில், மாயமான விமானத்தில் பயணம் செய்த 4 பேர், போலி பாஸ்போர்ட்டில் பயணித்துள்ளது தெரியவந்துள்ளது.
இதனால் விமானம் மாயமானதில், பயங்கரவாத அமைப்புக்களின் கைவரிசை இருக்குமோ என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது.தொடர்புடைய செய்தி- 239 பயணிகளுடன் சென்ற விமானம் கடலில் விழுந்து நொறுங்கியது
                     
                    

Post a Comment

0 Comments