மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓந்தாச்சிமடம் பகுதியில் யுவதி யொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் நேற்று சனி க்கிழமை மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
35வயதுடைய யுவதி ஓந்தாச்சிமடம் காளிகோவில் வீதியில் உள்ள வீடு ஒன்றிலேயே குறித்த யுவதி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலம் மீட்கப்பட்டு களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டதுடன் இது தொடர்பான விசாரணையை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
இதேநேரம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
0 Comments