Home » » மாயமான மலேசிய விமானத்தின் கதவு கடலில் மிதப்பதாக தகவல்

மாயமான மலேசிய விமானத்தின் கதவு கடலில் மிதப்பதாக தகவல்

239 பயணிகளுடன் மாயமான மலேசிய விமானத்தின் கதவு தென்சீன கடலில் மிதப்பதாக வியட்நாம் நாட்டின் ராணுவத் தேடுதல் குழுவினர் இந்த தகவலை தெரிவித்துள்ளனர். தென் சீன கடலில் இருந்து தோட்சு தீவில் இருந்து 90 மைல் தூரத்தில் இருக்கும் கடல் பகுதியில் விமானம் மூலம் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட ராணுவக் குழுவினர் இந்த தகவலை உறுதி செய்தனர். ஏற்கனவே கடலில் எண்ணெய் படலம் மிதந்த இடத்தின் அருகே விமானத்தின் கதவு போன்ற பொருள் மிதப்பதாக வியட்நாம் ராணுவ லெப்டினல் ஜெனரல் போவான் டுவான் தெரிவித்துள்ளார். அது விமானத்தின் கதவு தான் என்று நம்புவதாக கூறிய டுவான் அந்த இடத்தை மேலும் ஆராய கடலோர காவல் படையின் 2 கப்பல்கள் உடனடியாக அனுப்பபட்டுள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.
விமானத்தை தேடும் பணியில் இந்தோனேசியா, சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, ஆஸ்திரேலயா, சீனா, அமெரிக்கா, வியட்நாம் நாடுகள், 34 விமானங்களும், 40 கப்பல்களும் ஈடுபட்டுள்ள நிலையில் விமானத்தில் இருந்த பயணிகள் சிப்பந்திகள் உட்பட 239 பேரும் உயிரிழந்திருக்கலாம் என கருதப்படுகிறது. இதனிடையே விமான விபத்தில் உறவினர்களை பறிகொடுத்த சீனர்கள் மலேசிய தலைநகர் கோலாலம்பூர் செல்ல வசதியாக உடனடி பாஸ்போர்ட்களை வழங்க பீஜிங்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை கோலாலம்பூரில் இருந்து பீஜிங் புறப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் வியட்நாம் அருகே தென்சீன கடல் மீது சென்ற போது மாயமானது குறிப்பிடத்தக்கது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |