Home » » சம்பூர் விவகாரத்துக்கு தீர்வு கிடைக்குமா?

சம்பூர் விவகாரத்துக்கு தீர்வு கிடைக்குமா?

திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் மூதூர் பிர­தே­சத்தில் மிகவும் பிர­பல்­ய­மான கிராமம் சம்பூர். அத்­தனை வளங்­க­ளையும் சம்­பூர­ண­மா­கக்­கொண்­டதால் சம்பூர் எனும் பெயர் இடப்­பட்­ட­தாக வர­லாறு கூறு­கின்­றது. ஒரு­புறம் கடலும், மறு­புறம் மலையும், இன்­னு­மொ­ரு­புறம் அகன்ற வில்­லுக்­கு­ளமும், மற்­றொ­ரு­புறம் பரந்து விரிந்த வயல்­நி­லங்­களும், தோட்டக் காணி­களும் நிறைந்த வளம்­மிக்க இட­மாகும். இங்கு உண­வுக்கோ அன்றி தொழி­லுக்கோ, வரு­மா­னத்­திற்கோ ஒரு­போதும் குறை எற்­பட்­டது கிடை­யாது. ஈழ­வி­டு­தலைப் போராட்டம் ஆரம்­ப­மாகி 1995ஆம் ஆண்டு விடு­தலைப் புலி­களின் கட்­டுப்­பாட்டில் இப்­பி­ர­தேசம் இருந்து அவர்கள் வெளி யேறும் வரைக்கும் அர­சாங்­கத்தின் எந்த வித­மான அபி­வி­ருத்­தி­களும் அங்கு நடை­பெ­ற­வில்லை.
அத்­த­கைய கால­கட்­டங்­களில் மக்­களின் இயல்­பு­நிலை படிப்­ப­டி­யாகச் சீர்­கு­லைந்து அல்­லல்­பட்ட வாழ்க்­கை­யா­க­மாறி தற்­போது அங்­கி­ருந்து மக்கள் வெளி­யேற்­றப்­பட்டு அக­தி­மு­காம்­களில் சொல்­லொணாத் துன்­பங்­களை அனு­ப­வித்து வரு­கின்­றனர்.
இலங்­கையில் மக்கள் வெளி­யே­றிய அனைத்துப் பகு­தி­க­ளிலும் மீண்டும் மக்கள் குடிய­ம­ரத்­தொ­டங்­கி­யி­ருக்கும் நிலையில் சம்பூர் பிர­தே­சத்தில் மட்டும் மக்கள் குடி­ய­மர அனு­ம­திக்­கப்­ப­ட­வில்லை.
கௌரி­வி­ரத காலத்தில் லட்­சக்­க­ணக்­கான பக்­தர்கள் ஒன்­று­கூடி ஆயி­ரக்­க­ணக்­கான கௌரி­காப்­புகள் வழங்­கப்­பட்ட மிகவும் பிர­சித்­தி­பெற்ற சம்பூர் பத்­தி­ர­காளி கோவில், பல கல்­வி­யா­ளர்­க­ளையும், சமூ­க­சே­வை­யா­ளர்­க­ளையும் உரு­வாக்­கிய சம்பூர் மகா­வித்­தி­யா­லயம், சம்பூர் ஸ்ரீமு­ருகன் வித்­தி­யா­லயம் ஆகிய பாட­சா­லை­களும், சமய வர­லா­று­களை இப்­பொ­ழுதும் ஆதா­ரங்­க­ளுடன் சொல்லிக் கொண்­டி­ருக்கும் தோணிக்கல் என்று சொல்­லப்­ப­டு­கின்ற சிவ­பெ­ரு­மானும் உமை­யாளும் தோணியில் வந்­தி­றங்­கிய இரு­வ­ரின் ­காற்­பாத அடை­யாளங்களும், புலியின் கால் அடை­யா­ளங்­களும், சங்­கி­லியின் நீண்ட அடை­யா­ளமும் இப்­போதும் அழிந்து விடாமல் இருப்­பது வர­லாற்றுச் சின்­னங்­க­ளாகும். இதை­விட மிக­முக்­கி­ய­மாக இந்து சமுத்­தி­ரத்தில் பய­ணிக்கும் கப்­பல்­களை சரி­யான திசைக்கு வழி­காட்டும் வெளிச்­ச­வீடும் இங்­குதான் இருக்­கின்­றது. இந்த வெளிச்­ச­வீ­டா­னது தேன், சுண்­ணாம்பு என்­பன கலந்து வெள்­ளைக்­கா­ரர்­களால் கட்­டப்­பட்­ட­தொன்­றாகும். அத்­தோடு ஆதா­ரங்­க­ளுடன் கூடிய மத்­த­ள­மலை, மாரி­கா­லத்தில் கட­லோடு சங்­க­மிக்கும் வில்­லுக்­குளம் போன்ற தமி­ழர்தம் அரிய பொக்­கி­ஷங்கள் நிறைந்த இப்­பி­ர­தேசம் இப்­பொ­ழுது மக்கள் நட­மாட்­ட­மின்றி காடு­க­ளாக மாறி­விட்­டது. இலங்கைக் கடற்­ப­டை­யி­னரின் முழுக்­கட்­டுப்­பாட்டில் இருக்­கின்­றது. அங்­கி­ருந்த பெறு­மதி வாய்ந்த நூற்­றுக்­க­ணக்­கான வீடுகள் தரை­மட்­ட­மாக்­கப்­பட்­டு­விட்­டன. அவ்­வீ­டு­களின் உடை­மைகள் அனைத்தும் சூறை­யா­டப்­பட்­டு­விட்­டன. சம்பூர் மகா­வித்­தி­யா­லயம் கடற்­படை முகா­மா­கி­விட்­டது. மூதூர் கிழக்கின் சம்­பூரைச்­ சூ­ழ­வுள்ள கூர்­நெல்­தீவு, இளக்­கந்தை, கடற்­க­ரைச்­சேனை, சேனையூர், கட்­டை­ப­றிச்சான் போன்ற கிரா­ம­மக்கள் மீளவும் குடி­ய­மர அனு­ம­திக்­கப்­பட்ட நிலையில் சம்­பூரில் வாழ்ந்த நூற்­றுக்­க­ணக்­கான குடும்­பங்கள் ஜீவ­னோ­பா­யத்­திற்கே வழி­யில்­லாமல் அகதி முகாம்­களில் அர­சாங்­கத்தின் உத­வி­களும் நிறுத்­தப்­பட்ட நிலையில் கடும் வெயி­லிலும், மழை
வெள்ளத்­தாலும் பல தட­வைகள் பாதிக்­கப்­பட்டு தொடர் துன்­பங்­களை அனு­ப­வித்து வரு­கின்­றனர்.
இந்த உண்மை நிலை­யா­னது இங்கு குறிப்­பி­டப்­பட்­ட­வற்­றை­விட இன்னும் அதி­க­மா­னது. இன்னும் ஏரா­ள­மான விட­யங்கள் இதனுள் அடங்­கி­யி­ருக்­கின்­றன. விடு­தலைப் புலி­களின் கட்­டுப்­பாட்டில் இந்தப் பிர­தேசம் இருந்­த­போது இங்­கி­ருந்த மக்கள் சுதந்­தி­ர­மாக வாழ்ந்­தார்கள் என்று சொல்­ல­மு­டி­யாது. அப்­போ­து­கூட சுதந்­தி­ரத்தை இழந்­தி­ருந்த மக்கள் இன்­று­வரை வாழ்­வி­டத்­திலும் சுதந்­தி­ர­மில்­லாமல், வறி­ய­வர்­க­ளாக்­கப்­பட்டு அக­தி­மு­காம்­களில் அடைக்­கப்­பட்­ட­வர்­க­ளாக, அன்­றாட உண­வுக்கே வழி­யில்­லா­த­வர்­க­ளாக ஆக்­கப்­பட்டு விட்­டனர்.
காலம் காலமாக தமிழ்பேசும் தனித்தமிழர் வாழ்ந்த இந்தப் பிரதேசம் இன்று காடாக மாறிப்போய்விட்டது.
இந்நிலையில் ஜெனிவா மாநாட்டில் இந்த உண்மை வெளிப்படுத்தப்படுமா? என்பது திருகோணமலையில் வாழும் அத்தனை மக்கள் மனதிலும் எழுந்துள்ள மிகப்பெரும் கேள்வியாகும்
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |