Advertisement

Responsive Advertisement

பளையில் பாரிய விபத்து கடைக்குள் புகுந்தது பஸ்!

யாழ்ப்பாணத்தில் இருந்து கிளிநொச்சிக்கு அரச ஊழியர்களை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று பளை நகர்ப் பகுதியில் சைக்கிளில் வந்த பாடசாலை மாணவனை மோதித் தள்ளிவிட்டு பின்னர் இரட்டை மாடிக் கட்டடக் கடை ஒன்றுக்குள் புகுந்தது. இந்த விபத்துச் சம்பவத்தில் சுமார் 30 இற்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
குறித்த மாணவன் உட்பட இருவர் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்திய சாலையில் இருந்து உடனடியாக அம்புலன்ஸ் மூலம் யாழ். போதனா வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டு அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். பஸ் புகுந்ததில் கடையின் மேல்மாடி இடிந்து பஸ்சுக்கு மேல் விழுந்தது.
dcp222 (1)

இதனாலேயே பஸ்ஸில் பயணித்தோர் காயமடைந்துள்ளனர். குறித்த கடைகளுக்கு முன்பாக நின்றவர்களில் 9 பேரும் காயமடைந்துள்ளனர். இந்த விபத்தில் மாணவனான ஜெ. திவாகரன் (வயது-13, புலோப் பளை), எஸ். கீதாபாலினி(வயது -29, இணுவில்) ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

காயமடைந்த பா.மாலினி(வயது-31, பாலாவி), தி.ஐங்கரன்(வயது-38,அச்சுவேலி), த.வசந்தராஜ்(வயது-38, மீசாலை வடக்கு), கா. உதயகுமார்(வயது-31,அரியாலை), ப. கனகரத்தினம்(வயது-33, கைதடி தெற்கு), லூர்த் வின்சன் கிரேஸ் நோயலின்(வயது-29, மானிப்பாய்), ஜே.அழகேஸ்வரி(வயது-28, நுணாவில் மேற்கு), வ.முரளிதரன்(வயது-47கல்வயல்), யோ.கஜன்(வயது-21,தெல்லிப்பளை), த.குகபரன்(வயது-36, சித்தங்கேணி), ச.பிரேமினி(வயது-31, நுணாவில் மேற்கு), கி.ஆனந்தரூபன்(வயது-36,இணுவில்மேற்கு), வீதிக் கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொலிஸ் கான்டபிள் கமக(வயது – 27) ஆகியோர் சாவகச்சேரி வைத்திய சாலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிறு காயங்களுக்கு ஆளானோர் உடன் சிகிச்சை பெற்றுக்கொண்டு வீடுகளுக்குத் திரும்பினர்.
dcp222 (3)

Post a Comment

0 Comments